பக்கம்:பாலைப்புறா.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 பாலைப்புறா

வயதுக்காரி...

அந்த மூவரும், கும்பலாய் நின்றவர்கள் பக்கமாய் வந்தார்கள். உடனே இன்ஸ்பெக்டர் சிங்காரம் தன்னை அங்கீகரிப்பது போல் பார்த்த அந்தம்மாவுக்கு ஒரு கும்பிடு போட்டார். பிறகு, சபாரிக்காரரைப் பார்த்து விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்தார். எஸ்.பி.க்கு கூட இப்படி அடிக்காத சல்யூட்... அவரைப்பார்த்த அந்த படகுக்கார் மனிதர் எப்படிய்யா இருக்கே?” என்று அவரை கீழ்நோக்கிப் பார்த்துவிட்டு, அந்தக் கும்பலில் முகமறியா ஒருத்தியை தேடினார். இன்ஸ்பெக்டர் குழைந்து நின்றதை அலட்சியப் படுத்தியபடியே, கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார்.

‘கலைவாணி., என்கிறது யாரு...?” எல்லோரும் கலைவாணியையே உற்றுப் பார்ப்பதைப் பார்த்ததும், அவருக்குப்புரிந்து விட்டது. கலைவாணியின்கைகளைப் பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டார். இதற்குள், சல்வார் கமிஷ்காரி துள்ளிக் குதித்து ஒடிப்போய், கலைவாணியின் பக்கமாய்ப போய் நின்று, அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் அம்மா வந்து, கலைவாணி யின் தோளில் கை போட்டாள். பிறகு, உணர்ச்சிப் பெருக்கில் அவளையும், அவளைக் கட்டிப் பிடித்த தன் மகளையும் இறுகத் தழுவியபடியே விம்மினாள்... சபாரிக்காரர், மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். பாதி புரிந்தும், புரியாமலும் நின்ற கலைவாணியிடம் பேசினார்.

‘நீ செய்திருக்கிற உதவிக்கு ஜென்மம் ஜென்மமாய் கடன் பட்டிருக்கோம்மா. இல்லாட்டி, என் ஒரே மகளான இந்த சாந்தி ஒரேடியாய்ப் போயிருப்பாள். நான்கூட, நீடெலிபோன்லே பேசும் போதும், டெலிகிராம் கொடுத்த போதும் முழுசாநம்பல... பத்திரிகைகளுலே பார்த்த பிறகுதான், முழு நம்பிக்கை ஏற்பட்டது. எனக்கு சம்பந்தியாய் உறவாட இருந்தவனையும், இந்த சுமதியையும் நான் விடப் போறதாய் இல்ல... இந்தாப்பா சிங்காரம்...’

‘எஸ்... சார்’

‘இந்த சுமதி மேல ஒரு புகார் கொடுக்கணும். ஒரு இளம் பெண்ணை தெரிந்தே திட்டமிட்டே... சிறுகச் சிறுக கொலை செய்யப் போனவளை, நீ உடனே கைது செய்யனும்’

இன்ஸ்பெக்டர் சிங்காரமாய் தலையாட்டியபோது, கலைவாணி குறுக்கிட்டாள்.

‘இந்த மாதிரி கடுமையான குற்றங்களைத் தண்டிக்க, சட்டத்தில இடமில்லன்னு சொல்றாங்க..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/290&oldid=635741" இலிருந்து மீள்விக்கப்பட்டது