பக்கம்:பாலைப்புறா.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 289

இல்லாட்டி இப்பவும் சொல்றேன்... ஒங்களால என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க. அரெஸ்ட்வாரண்ட் இருக்குதான்னுக் கூட நான கேட்கப் போவதாய் இல்ல... ஏன்னா, நாட்டு நிலைமை எனக்கு நல்லாவே தெரியும்...”

‘அரஸ்ட் வாரண்டே இருந்தாலும்... எங்களை, கைது செய்யாமல், நீங்க இவர்கிட்ட நெருங்க முடியாது...’

‘கையிலே லத்திக் கம்பையும், இடுப்பிலே துப்பாக்கியையும் விளையாட்டுக்காக கொடுக்கலம்மா...”

‘உங்க திருவிளையாடல்தான்...’

‘ஷட்டப்... மிஸ்டர் அசோகன் பெண்களுக்கு பின்னால பேடியா ஒளியாதிங்க. மரியாதையாசரண்டர்.ஆயிடுங்க...”

‘என்ன அநியாயம்...? இவர் என்ன வீரப்பானா... இன்ஸ்பெக்டர்...’ இன்ஸ்பெக்டர் சிங்காரம், அப்படிக் கேட்டவளை உற்றுப் பார்த்தார். அடையாளம் வைத்துக் கொள்ளும்படிப் பார்த்தார். அதே சமயம், அசோகனை, முன்பு நினைத்ததுபோல், இழுத்துப் போகவும் பயம்... அரெஸ்ட்வாரண்ட் கூட இல்லை. இப்படி தெரிந்திருந்தால், ராத்திரியோடு ராத்திரியாய் இழுத்துட்டுப் போயிருக்கலாம்...

இன்ஸ்பெக்டர், பின் வைத்த காலை முன் வைக்க முடியாமலும், முன் வைத்த காலை பின் வைக்க முடியாமலும் திண்டாடினார். இந்த கான்ஸ்டபிள்களாவது என்னை சமாதானப்படுத்தலாம். எதாவது சாக்கு சொல்லி, என்னை இழுத்துட்டுப் போகலாம். எப்படிச்சிரிக்காங்க... எனக்கு திண்டாட்டமுன்னா. இவங்களுக்கு கொண்டாட்டம்.

அசோகன், தன் பாட்டுக்கு கூரைமேட்டைப் பார்த்துக் கொண்டு நின்றான். சந்திரா. தன்னை அறியாமலே, அசோகன் கையைப் பிடித்துக் கொண்டாள். இந்த பெண்களோ, இன்ஸ்பெக்டரையே கைது செய்ய போவதுபோல் பார்த்தார்கள். இன்ஸ்பெக்டர் சிங்காரம் யோசித்தார். எம்.எல்.ஏ. அவர்களை வெறுங்கையோடு பார்த்தால், அவர் எந்த முகத்தோடு சுமதியம்மாவைப் பார்ப்பார்.

இப்படியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றபோது, எதிரே ஒரு படகுக்கார்வந்தது தெரியாமல் வந்துநின்றது. பின்னிருக்கையில் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். ஒருத்தர் நீலச் சபாரிக்காரர். அறுபது வயது இருக்கலாம்.உருண்டு திரண்ட கண்கள்...ஆடையைப் போல், முகத்திலும் ஒரு வாளிப்பு. அவரது ஒரு பக்கம் ஒரு சல்வார் கமிஷ் பெண். மறுபக்கம், கழுத்துக்குக் கீழே ஒரு அங்குலம் கூட உடம்பைக் காட்டாத ஒரு ஐம்பது ufr. 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/289&oldid=635739" இலிருந்து மீள்விக்கப்பட்டது