பக்கம்:பாலைப்புறா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 பாலைப்புறா

அந்த டெம்போ, அந்த தெருவில் முனைக்குப் போய், வலதுபக்கமாய்த் திரும்பி, தொகுப்பு வீடுகளைத் தாண்டி, தனித்திருக்கும் முருகன் கோவிலுக்கு அப்பால் சென்று, அந்த கம்பிச்சாலையை எல்லையாகக் கொண்ட, ஒரு விசாலமான இடத்திற்கு முன்னால் நின்று, நொண்டியடித்தது. கலைவாணி மீண்டும் அதட்ட, அந்த இடத்தில் மத்தியப்பகுதியில் நின்றது. இரண்டு ஏக்கர் சதுரளவு இடம். குண்டு குழி அடைபட்டு, அந்த நிலத்திற்கு முடிவெட்டியது போன்ற புல் தளிர்களால் அலங்காரமாய்த் தோன்றியது.

டெம்போவில் இருந்து முன்னாலும், பின்னாலுமாய் குதித்தவர்கள், ஒரு நிமிடம், மூக்கில் விரல் வைத்து அப்படியே நின்றார்கள். எந்த இடத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டிருக்க வேண்டுமோ - அந்த இடத்தில் ஒரு கொட்டகை எலும்புக் கூடு - அதற்கு மாமிசத் தோல் போர்த்த பனையோலைகள். தென்னந்தட்டிகள். இந்த கூட்டிற்குள், அதன் ஆன்மா போல், கம்பு முளைகளில் கட்டப்பட்ட நான்கைந்து எருமை மாடுகள். ஏழெட்டு வேலையாட்கள், மூங்கில் கம்புகளைக் கட்டுவதும், பச்சைத் தென்னை ஒலைகளைப் பின்னுவதுமாக இயங்கினார்கள். மிராசுதார் ராமசுப்பு, வேலையாட்களை மேற்பார்வையிட்டார். உருளை உடம்பு... ஐம்பது வயதிருக்கலாம். பின் பக்கம் முதுகு வளைந்திருந்ததால், முகம் மட்டும் ஒணாண் மாதிரி.

கலைவாணிக்கும், அந்தப் பெண்களுக்கும் இன்னொரு அதிர்சி. ஒரு பட்டுத்துணி மறைவோடு உள்ள அடிக்கல், சரளைக் கற்களோடு, அநாதையாய்க் கிடந்தது. அச்சடித்தது போன்ற முத்து முத்தான எழுத்துக்களில் சாணக் கறைகள்... அந்தக் கல் பொருத்தப்பட்ட இடம், அரையடி ஆழத்தில் வெள்ளைமண்ணைக்காட்டி, இதுதான் வெள்ளையன்பட்டி என்று சிரித்தது.

கலைவாணியும், அவள் தோழிகளும் கொட்டகை போடப்பட்ட இடத்திற்கு ஒடினார்கள். எதுவுமே நடக்காததுபோல், ஒரு பனையோலை மட்டையை, அரிவாளால் ஒரேதுண்டாக வெட்டிய ராமசுப்புவை, அதிர்ந்து பார்த்தார்கள். அவருக்கு சிறிது தொலைவில் உள்ளூர் விவேகிகள் ஐந்தே ஐந்து பேர் தற்செயலாக வருவதுபோல் அந்தப் பக்கமாய் வந்தார்கள். சாணத்தில் புரளும் எருமை மாடுகள், ‘விட்டுடு' என்பது போல் ‘இம்மா' போட்டன.

கலைவாணிக்கு அழுகையே வந்தது. முறையிட்டாள்.

"மாமா... நீங்க செய்யுறது முறையில்ல மாமா. நம்ம ஊர்ல சரியான வைத்திய வசதி இல்லாமல், ரெண்டு பேரு பிரசவத்திலேயே இறந்து போனது ஒமக்கு தெரியாதா மாமா? 'தெக்குத்தெரு' காளிமுத்து அத்தை ஆஸ்பத்திரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/30&oldid=1404959" இலிருந்து மீள்விக்கப்பட்டது