பக்கம்:பாலைப்புறா.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரம் 301

வாங்கினேன்...

எவனுக்கு வணக்கம் போட்டானோ, அதே கருட மூக்கன். டிலோகரை காலால் இடறினான். தொப்பென்று விழுந்தவனின் சட்டைக்காலரைப் பிடித்து, தூக்கி நிறுத்தியபடியேகத்தினான்.

‘நாங்க... போலீஸ் நிற்கோம். நீ கிரிமினல்... மகராசா மாதிரி... கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கியா...? சொல்லுடா... அந்தச் செயினை, எங்கடா வச்சிருக்கே...? சொல்லுடா...”

மனோகரின் தலைக்கு குறி வைத்து, லத்திக் கம்பை நீட்டிய காவலரை அன்புமணி பிடித்துக் கொண்டான்.

‘சொல்லிடுவான். சார். சொல்லிடுவான். ஆயிரம் இருந்தாலும் அவன் என் தோஸ்து... சார்... டேய் மனோ.... அந்தச் செயினை எங்கே வச்சிருக்கேன்னு சொல்லித் தொலையேண்டா... சோமாறி ஒன்னால நான் உதைதின்னுறேன்.’

மனோகர், அன்புமணியை மருண்டு பார்த்தபோது, அவன் பக்கத்தில் நின்ற விகாரப் பார்வைக்காரன் கருத்துரைத்தான்.

‘இவனை மாதிரி..கே.டிகளை ஸ்டேஷன்லே விசாரிக்கிற விதமாய் விசாரிக்கணும். ஏண்டா... அன்புமணி...நீயும் அவன் கூடச் சேர்ந்து நடிக்கிறியா...முட்டிக்கு முட்டி பிஞ்சிடும்.’

மனோகருக்கு, ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அது புரியப் புரிய, சகாக்களிடம் முறையிடப் போனான். ஆனால் அவர்களோ, அவனை முகம் சுழித்துப் பார்த்தார்கள். இதுவரை, அவர்களில் எவனுமே திருடாதவன்... தில்லு முல்லு செய்யாதவன்; நட்சத்திர அறைக்குள் இருக்கும் போது, மேசையில் சிதறிக் கிடக்கும் நூறு ரூபாய் நோட்டுக்களை ஒப்புக்கு கூட பார்க்க மறுப்பவர்கள். இப்படிப்பட்ட சர்க்கிளில், இவனா? எப்படிக் கண்டுபிடிக்காமல் போனாம்...

ஒருத்தன் யோசனை சொன்னான்...

‘இழுத்துப் போய்...நல்லா உதைங்க சார்.குலத்தைக கெடுக்க வந்த கோடாரிப்பயல்... டேய்...இனிமேல் காட்டி, எங்கப்பக்கம் வந்தே... அப்பால நடக்கிறதே வேற...’

தாம்பரத்துக்காரன் மட்டும், மனம் கேட்காமல் பேசினான்.

‘உதைங்க சார்... திருடனை உதைக்கிறதிலதப்பில்ல சார். ஆனால், எங்க முன்னால வேண்டாம் சார். ஆறுமாச சகவாச தோஷம் மனசு கேட்க மாட்டங்கிது..'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/301&oldid=635755" இலிருந்து மீள்விக்கப்பட்டது