பக்கம்:பாலைப்புறா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 பாலைப்புறா

தோப்புப் பக்கம் ஒரு பொட்டல் காடு இருக்குதே. அங்கே நடச்சொல்லுங்க”

"பிறக்கிற பிள்ளைங்கள நரி தூக்கிட்டுப் போகவா?”

“அப்டி இல்ல... முட்டாப்பய மகளே. நில விவகாரம் ஒங்களுக்கு சாதகமாய் ஆயிட்டால், அங்கே நடுறதை இங்கே நட்டுட்டால் போச்சு. சீக்கிரம் பஞ்சாயத்து வைச்சுக்குவோம்".

அந்தப் பெண்களுக்கு, அழுகை வரப் போன வேளை; இதற்குள், உள்ளூர் விவேகிகள், பேச்சு வார்த்தைகளை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் கண்ணைச் சிமிட்டினார்கள். பிறகு, ஒருத்தர் கேட்டார்.

“ஆம்புளைகள மதிக்காமல் பொட்டச்சிகளாய் சேர்ந்து இப்படி ஆடாத ஆட்டம் ஆடினால் பாடாத பாடுதான் படணும்".

“அப்டி என்னத்த ஆடிட்டோம் தாத்தா".

"இந்தக் கூட்டத்தை எப்படி நடத்தனுமுன்னு ஒரு வார்த்தை, கேட்டியளா... எங்க பேரக்கூட போடாண்டாம். ஆனால் ஒரு பேருக்காவது கேட்கனும் இல்லையா?”

"தப்புத்தான் தாத்தா! ஆனாலும் இதைப் படித்துப் பாருங்க தாத்தா!"

அந்தச்சமயம் பார்த்து கையில் காகிதக் கட்டோடு மூச்சிறைக்க ஓடிவந்து நின்ற வாடாப்பூவிடம் இருந்த நான்கைந்து காகிதங்களை, அந்த விவேகிகள் சிண்டிகேட்டின் தலைவரான ஆறுமுகக் கிழவரிடம், கலைவாணி நீட்டினாள். அதைப் படித்ததும் அவருக்குப் பரமானந்தம். அவரும், இவர்களும் முன்னிலை; இந்த பக்கத்துப் பழனியாண்டி பெயர்தான் விடுபட்டுட்டு - விடுபட வேண்டியவன்தான்.

வெள்ளையன்பட்டி விவேகிகள், பழனியாண்டி நீங்கலாக, இப்போது ராமசுப்புவை முகம் சுழித்துப் பார்த்தார்கள். இவர்கள், தங்களை மதிக்கவில்லை என்பதற்காக, வரப்பு வெட்டி திலகமான ராமசுப்பை, சும்மா, ரெண்டு கம்பு கழிகளைப் போடச் சொன்னது இவர்கள்தான். பொட்டப் பிள்ளைகளை ஒரு அதட்டுப் போட்டுட்டு, அப்புறமாய் விட்டுக் கொடுக்கணும் என்கிறது நோக்கம். ஆனால் இந்தப் பயல். இதுதான் சாக்குன்னு இடத்தை அமுக்குகிறான். விடப்படாது. அதுவும் நாம் முன்னிலை வகிக்கும் போது...

“எடே ராமசுப்பு நம்ம பிள்ளையடா.. கொட்டகய பிரிச்சிடுடா".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/32&oldid=1404961" இலிருந்து மீள்விக்கப்பட்டது