பக்கம்:பாலைப்புறா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 45

“இவரு... இவரு என் உட்பி கணவர். மெட்ராஸ்ல கம்ப்யூட்டர் என்ஜினியர்".

"குட். கல்யாணச்சாப்பாடு எப்போ...?"

கலைவாணி பதில் சொல்ல நாக்கை நீட்டியபோது, ஒரு குறுந்தாடி இளைஞன் வந்தான். ஒல்லியான உடம்பில் அழுத்தமான பார்வை. மாவட்ட சுகாதாரம், அவனை செல்லமாய்க் கண்டித்தது.

"ஏம்பா...! ஒப்பா ஒன்னை டாக்டருக்கு படிக்க வச்சது. உழைக்கிற காசைகரியாக்கவா... ஹெச்.ஐ.வி. டெஸ்டுக்குன்னு எதுக்காக அந்த எய்ட்ஸ் டெஸ்ட் இன்ஸ்ட்ரூமென்டை வாங்குனே? மூன்று லட்சம் ரூபாயை இப்படியாபாழ் பண்றது?”

டாக்டர் அசோகன், அவருக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. உயிர் கொல்லி எய்ட்ஸ் கிருமிகள் பிடித்த அப்பாவிகளையும், பாவிகளையும், கண்ணாடி அறையில் போட்டு, அவர்களுக்கு ரொட்டி, சப்பாத்தியை நாய்களுக்கு வீசுறது மாதிரி வீசுறாங்களே அரசாங்க டாக்டர்கள்... அந்த சாதி இவரு; எய்ட்ஸ் நோயாளிக்கிட்ட முகமூடி போட்டு பேசுற சுயபய சாதி, பேசிப் பிரயோசனமில்லாத வர்க்கம்...

டாக்டர் அசோகன், கண்டிப்பாய்க் கேட்டான்.

"இந்த எம்.எஸ்.ஏ.வுக்காக எவ்வளவு நேரம் யார் காத்து நிற்கிறது? இந்திய ஸ்டான்டர்ட்படி ஒரு மணி நேரம் காத்திருக்கலாம். அதுக்கும் மேலேயும் மணியாயிட்டே".

"இந்த மருத்துவ முகாம் துவக்க விழாவில் எய்ட்ஸ் பற்றி மக்கள் கிட்டே நீயே எடுத்துச் சொல்லேன்..."

"காத்திருக்கிறதுக்கு போனஸா?”

"என்ன டாக்டர். இப்போதான். ஒங்களை கேட்கிறது மாதிரி பேசுறீங்க. ஒங்களை நான் கூட்டி வந்ததே, எய்ட்ஸ்ல அதாரிட்டியான நீங்க, இந்த முகாமுல பேசணுமுன்னுதானே".

இப்படிச் சொன்ன டாக்டர் சந்திராவை, மாவட்டம் முறைத்தது. ‘என்கிட்ட கேளாமல் நீ எப்படிடி கூப்புடலாம்... லவ்வா...?'

டாக்டர், அசோகன் கோபமாகப் பேசினான்.

"இதுக்கு மேலேயும் காத்திருக்கிறதில அர்த்தமில்ல டாக்டர். ஊர்க்காரங்க புறப்படுறாங்க பாருங்க. மேடைப் பேச்சு எப்போ எங்கே வேணுமுன்னாலும் நடக்கட்டும். ஆனால் மெடிக்கல் செக்கப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/45&oldid=1404991" இலிருந்து மீள்விக்கப்பட்டது