பக்கம்:பாலைப்புறா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு..சமுத்திரம் 47

கறக்கலாம்’.

இதற்குள், வெள்ளை யூனிபார டாக்டர்களும், மற்ற ஊழியர்களும், அந்த நீளவாகு கட்டிடத்தில், அறை அறையாய் உட்கார்ந்தார்கள். கலைவாணியும், இதர இயக்க, மன்றப் பெண்களும், ஊராரை ஒவ்வொருவராய் ஒழுங்குபடுத்தினார்கள். ஒடிப்போன சிறுவர் சிறுமியரை இழுத்து வந்தார்கள். ஆனாலும் எல்லோருக்கும் பயம். எதாவது ஒன்று கிடக்க ஒன்று சொல்லிடுவான் என்கிற பயம். இதனால் கலைவாணி முன் வந்தாள். ‘நானும் மனோகரும் மொதல்ல போறோம்' என்றாள்.

மனோகரும், கலைவாணியும் உள்ளே போனார்கள். கூடவே கனகம்மா, வாடாப்பூ, மற்றபடி கப்சிப்; அந்த நால்வரின் பெயரையும், வருகைப் பதிவேட்டில் ஒரு நோஞ்சான் பெண் எழுத, டாக்டர் சந்திரா, அவர்களை ஸ்டெதாஸ்கோப்பால் தடவிவிட்டு, அவர்கள் பெயர் எழுதிய காகிதங்களையும் ஒன்று இரண்டு என்று நம்பரிட்ட சதுரக் காகிங்களையும் நீட்டினாள். இவளை விட்டு இன்னும் பலரைத் தாண்டி, அவர்கள் உள்ளே ஒரு அறைக்குள் போய் ஊசி வழியாய் ரத்தம் கொடுத்துவிட்டு, வெளியே வந்தார்கள்.

கலைவாணி... வரிசையாய் நின்றவர்களிடம் சொன்னாள்.

"இனிமேல் இவரு ஒண்ணாம் நம்பர்... நான் ரெண்டாம் நம்பர்..."

"ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் காதலா. மூணும் நாலும் சாட்சியா வெள்ளையன்பட்டி... கீப் இட் அப்..."

கிட்டே வந்து கிண்டல் செய்த ஒரு ‘எட்டாப்பு' மாமா மகனை, கலைவாணி சிரித்துக் கொண்டு துரத்தினாள்.

இதற்குள், மருத்துவ முகாம் துவக்க விழாவும் துவங்கிவிட்டது. எம்.எல்.ஏ. அண்ணன் வராமலே, டாக்டர் அசோகன், டாக்டர்களின் ஊசி குத்தலுக்குப் பயந்து, அங்கே உட்கார்ந்தவர்களிடம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருந்தான். அவன் வாயில் ஹெச்.ஐ.வி. கிருமிகள், எய்ட்ஸ் நோய், ஒருத்தன்- ஒருத்தி, காண்டோம் போன்ற வார்த்தைகள் துள்ளித் துள்ளி விழுந்தன. ஆரம்பத்தில் அவனைப் பார்த்தும், அப்புறம் அவன் பேச்சைப் பார்த்தும், சிரித்த வெள்ளையன்பட்டி பின்னர் பேயறைந்து போனது. அடேயப்பா.. ஒனக்கும் வரும், எனக்கும் வருமா...?

இதற்குள், துவக்கி வைக்க வந்த எம்.எல்.ஏ. அவர்கள், கூட்டம், தான் வருவதை கைதட்டாய் அங்கீகரிக்காததைக் கண்டு கோபமாய் வெளியேற, கூட வந்த, மா.சு. அதிகாரி டாக்டர் சுகுமார், அவர் பின்னால் தொங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/47&oldid=1405003" இலிருந்து மீள்விக்கப்பட்டது