பக்கம்:பாலைப்புறா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 53

"நான் அம்மா இல்ல... டாக்டர்; சொல்லுங்க... நீங்க கல்யாணம் ஆகாதவரா... பிரம்மச்சாரியா? ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு”.

‘சொல்லமாட்டேன்’.

‘கலைவாணி ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. அவளை கண்கலங்காமல் வைக்கிறதுதானே ஒங்க லட்சியம்’.

‘இது ஒரு நெகட்டிவ் அணுகுமுறை. அவளை கண்கலங்காமல் மட்டுமல்ல, எப்போதுமே, அவளை சிரிப்பும் கும்மாளமுமாய் வைக்கணும். இதுதான்.... என்னோட லட்சியம்’.

"அதுக்காக ஒரு சின்ன தியாகம் செய்வீங்களா?”

“சொல்லுங்க”.

"கல்யாணத்த மூன்று மாதம் ஒத்தி வைக்க முடியுமா?”

மனோகர் நிமிர்ந்து உட்கார்ந்தான். இவள் மென்டல் மட்டுமில்ல. மென்டல் ஆக்குகிறவள்;

"அது எப்படி முடியும்?”

“எப்படியோ முடியணும்!”

"இப்படி... உத்தரவு போடுறது மாதிரி பேசினால் எப்படி டாக்டர்? எங்க ஊர் முழுக்கும், எங்க கல்யாணப் பேச்சுத்தான் அடிபடுது. இந்த சுபகாரியம், வேற மாதிரி அடிபடுறதை, கலையே விரும்ப மாட்டாள்”.

‘இப்போ அவள் விரும்புறாளா விரும்பலியா என்கிறது இல்ல பிரச்சினை. அவளுக்கு எது தேவை என்கிறதுதான் முக்கியம். விருப்பத்தை தேவையாக்கினால், அது விவகாரத்தில கொண்டு போய்விடும். மூணேமூணு மாசம்... அப்புறம் யோசிக்கலாம்’.

‘அவளுக்கு ஏதும் நோய் இருக்குதா டாக்டர்’.

"நோ... நோ. நல்ல ஆரோக்கியம். அதனாலதான் சொல்றேன்”.

"மூணு மாதத்திற்கு யோசிக்கலாம்னு சொன்னிங்க. இப்போ வேற மாதிரி பூடகமாய் சொல்றீங்க. பச்சையாவே கேட்கிறேன் டாக்டர். இதுக்கும், ஒங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

“பாத்தீங்களா! இப்பவே இப்படி உணர்ச்சி வசப்பட்டால், அப்புறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/53&oldid=1405012" இலிருந்து மீள்விக்கப்பட்டது