பக்கம்:பாலைப்புறா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தார். அரசாங்கம் உபதேசிக்கும். ஒழுக்கம், எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள்- ஆகியவை குறித்த எனது கருத்துக்களை, எல்லா அரசு மேடைகளிலும் பேசவும், விவாதிக்கவும், முழு சுதந்திரத்தோடு சொல்வதற்கும், காரணமாக இருந்தவர் சு.சமுத்திரம். இறுதி நோக்கம், சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு துளியாவது மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்குமானால், யாரும் மனதுக்குப்பட்டதை சொல்லலாம் என்பது சமுத்திரத்தின் ஆழமான நம்பிக்கை என்று எனக்குப்படுகிறது.இந்த அணுகுமுறை தான் அவரது எழுத்திலும் வெளிப்படுகிறது.

எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகளை, வேதனைகளை வெளிப்படுத்துவதை விடவும், இந்த தொடர்கதையில், சமுத்திரம் அதிக வெற்றி பெறுவது எய்ட்ஸின் பெயரால் மோசடிகளில் ஈடுபடுகிற சில மருத்துவர்களையும், ‘தொண்டு’ நிறுவனங்களையும் அம்பலப்படுத்துவதிலேயேயாகும். கலைவாணி பாத்திரம், சமுத்திரத்தின் வேதனைகளுக்கும், தார்மீகக் கோபத்துக்கும் வடிகாலாய் விளங்கு கிறது; குடும்பக் கட்டுப்பாடு திட்டம் எப்படி முறைகேடாகவும், அராஜகமாகவும் நடைமுறையில் ஒரு காலகட்டத்தில் இருந்ததோ அதே திசையில்எய்ட்ஸ் திட்டம் போய்க் கொண்டிருப்பது பற்றி மருத்துவத் துறையிலும், சமூக நலப்பணித் துறையிலும், பலர் கவலையோடு இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக சமுத்திரம், இந்த நாவலில் செயல்பட்டிருக்கிறார். அதேசமயம், வெவ்வேறு தளங் களில், மனித இயல்புகள், எப்படி செயல்படுகின்றன என்பதில் ஆர்வம் காட்டும் எழுத்தாளனாக, எய்ட்ஸ் நோயாளி மனோகருடன், விதவிதமான முறைகளில் உறவாடும் பல்வேறு மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலின் இலக்கியத் தரம், நயம் பற்றியெல்லாம் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். எது இலக்கியம், எது அழகியல் என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடப்பதால்தான், இலக்கியம் வளர்ச்சிப் போக்கில் இருப்பதே சாத்தியப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தின் மற்ற படைப்புகளைப் போல, இதுவும் அத்தகைய விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படத்தான் வேண்டும். என்னளவில், சமுத்திரத்தின் நாவல் தருகிற சுவை, பச்சை மிளகாயை திடீரென்று கடிக்க நேருவது போன்றது. தயிர் சோற்றின் சுவையை மேலும் அனுபவிக்க,

அவ்வப்போது பச்சை மிளகாய் தேவைப்படுகிறது.

தினமணியில் இதழாசிரியராக 1996ல் நான் இருந்தபோது, சமுத்திரத்தின் இந்த

V1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/8&oldid=635861" இலிருந்து மீள்விக்கப்பட்டது