பக்கம்:பாலைப்புறா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவாதங்கள் தொடர்ந்து நடப்பதால்தான், இலக்கியம் வளர்ச்சிப் போக்கில் இருப்பதே சாத்தியப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தின் மற்ற படைப்புகளைப் போல, இதுவும் அத்தகைய விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படத்தான் வேண்டும். என்னளவில், சமுத்திரத்தின் நாவல் தருகிற சுவை, பச்சை மிளகாயை திடீரென்று கடிக்க நேருவது போன்றது. தயிர் சோற்றின் சுவையை மேலும் அனுபவிக்க, அவ்வப்போது பச்சை மிளகாய் தேவைப்படுகிறது.

தினமணியில் இதழாசிரியராக 1996ல் நான் இருந்தபோது, சமுத்திரத்தின் இந்த தொடர்கதை ஆசிரியர்குழுவால் பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிமித்தம், அவர் எனக்க இந்த முன்னுரை எழுதும் வாய்ப்பை அளித்திருக்கிறார். மேடையானாலும், புத்தகமானாலும், அவர் தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு. எனக்கு மனதில் பட்டதை சொல்லிக் கொள்ள முடிவதற்காக, அவருக்கு எனது நன்றி.

எய்ட்ஸ் பற்றியும், அது தொடர்பாக நமது சமூகப் பார்வை பற்றியும், இன்னும் கொஞ்சம் அதிகமானப் புரிதலுக்கு ஒரு துளி உதவியனாலும், இந்த நாவலின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக சமுத்திரம் மகிழ்ச்சி அடைவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

சென்னை - 41, -ஞாநி ஏப்ரல் 1998.

vii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/9&oldid=635872" இலிருந்து மீள்விக்கப்பட்டது