பக்கம்:பாலைப்புறா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஜய திருவேங்கடம் பார்வையில்

பாலைப்புறா

சமகால நடப்புக்களை கலைக் கண்ணோடு மட்டும் பார்க்காமல் 5LL இடங்களில், நேரங்களில் கவலையோடும், தீர்வு கிடைக்குமா என்ற தேடலோடும் பார்க்கிற எந்த எழுத்தாளனுக்கும், எய்ட்ஸ் ‘ஒரு கதைப் பொருளாகலாம். ஆனால், மனிதகுலத்துக்கெதிரான அந்தப் பேராபத்து சிங்திக்கிற போது, ஏதோ பாலியல் வக்கிரங்களின் வெளிப்பாடு என்ற கிட்டப் பார்வையில்லாமல், அது ஒரு பெரிய சமூகச் சிக்கலின் வெடிப்பு என்று கருதுவதிலேயும், அதன் சகல ஆயுதங்களையும் செயலிழக் கச்செய்வதிலேயும், சு.சமுத்திரம், தனித்து ஜொலிக்கிறார்.

போதை மருந்துகளின்பேயாட்டம். அதை மறைந்திருந்து பொம்மலாட்ட மாய் இயக்கும் சமூகவிரோத சக்திகள் ஒரு புறம்.

கந்தல், குடிசை, கூழ், கூடப் பிறந்த வியாதி இவற்றைத் தந்ததோடு உழைப்புக்கும் பெப்பே'காட்டும் வறுமை மறுபுறம்.

ஆணாதிக்கப்போக்கின் அவலம் மூன்றாவது பரிமாணத்தில்.

இங்தப் பின்னணியில், பதுங்கிப்பாயும் ஆட்கொல்லியின் பிடர்பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.ஆசிரியர்.

இங்கே கிராமம், நகரம் என்ற பூகோள வரையறைகள் பொசுங்கிப் போகின்றன. மெத்தப் படித்தவர்களின் சாதுர்யமும், சாமானியர்களின் பிள்ளை மனமும், துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

எப்போதும் சரசரக்கும் பட்டுப்புடவையில் சரள ஆங்கிலத்தில் சாமர்த்தியம் காட்டும் டாக்டர் சுமதியை, ஒரு சமூக விரோதியென கலைவாணி அடையாளம் காட்டுகிற போது இனியேது எனக்கு வாழ்வு’ என்று ஒதுங்கி, ஒடுங்கிவிடாமல், மற்றவர் வாழ்வை மதித்துக் காரிய மாற்றும் அவளது.துணிச்சல் தெரிகிறது. கிராமத்து புஷ்பமான கலைகசங்கி வீழ்வதைக் காண்கையில் நெஞ்சம் கலங்குகிறது.

viii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/10&oldid=635528" இலிருந்து மீள்விக்கப்பட்டது