பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனிச்சாறு முதல் தொகுதி


அற்றைநாள் பிறந்த அருந்தமிழ்த் தாயை
அரியணை யேற்றாமல்
மற்றையர் ஆட்சி மதித்துளம் வெம்பி
மானத்தை இழப்பேனோ?


தந்தன தான தனதன தான
தந்தன தனனான
தந்தன தனன தன தன தான
தன்னா தன தான!

- 1975

70