பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 92 வெம்புலியே வாளெடு! நம்மை, நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காப்பது மொழி! நல்லன. காட்டித் தீயன களைய உதவும்; நமக்கது விழி! செம்மைத் தமிழ் மொழி சீர்குலை வதனால் செந்தமிழ் நாடுறும் பழி! சிற்றறி வுடையோர் இந்தியைப் புகுத்தச் சிறுவர்; நீயதை ஒழி! வெம்மைக் கொடும் போர் விளையினும், மொழிக்கென வெற்புத் தோளினைக் கொடு! வீணரை வீழ்த்து! வெற்றியை வாழ்த்து! வெம்புலியே வாளெடு! இம்மை மறுமை யென் றேபல பிதற்றி இழிவார் பலர்; அதை விடு! இழப்பது வாழ்வே என்னினும் அவர்மொழி ஏற்பது தீது! உயிர் விடு! - 1959