பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ. ருங். 10 கணிச்சாறு முதல் தொகுதி நாடிய கள்ளர் எல்லாம் நாட்குநாள் நினைச்சி தைத்து வாடிய நெஞ்சாய் விட்டார் வாட்டம் வான் கொள்ளா (தம்மா! தையலே எஞ்சிநின்ற செம்பொருள் நூற்செல் வங்கள் கையள வேயா னாலுங் கணக்கிலா மதிப்புச் சூழும். உய்விலை யென்கின் றேனான் உயிரிலை என்கின் றாய்நீ நையலி னின்று மீளும் நாளெந்நாள் அறியே னம்மா? தொன்மையை எண்ணுங் காலைத் துவள்கின்றேன் ஐயோ (வந்தார் புன்மையை உன்னுங் காலைப் புரள்கின்றேன் தீயோர் (உன்றன் நன்மையைக் காணார் அல்லால் நலவினை ஏற்றுவார் (கொல். என்மை சூழ் இன்னல் உன்றன் இடரிலோர் துளியே (அம்மா! . தோளொடு தோள்நின் றாற்றத் துகள்வானில் மேவ (வார்க்கும் வாளொடு வாள்நின் றாற்ற வாங்குகை வீச் சொலிப்ப ஆளொடு ஆள்நின் றாற்றும் அருந்தமிழ்க் கூட்ட மெங்கோ துளொடு தூளாய்ப் போன வகையாகித் துவண்டு (போனாய் ! . நந்தமிழ்த் தாயைக் காக்க நாட்டினுள் மக்க ளெல்லாம் வெந்தநெஞ் சோடுகண்ணில் வெம்மையோ டணுகி நின்று வந்தவ ரோட்டி வாழ்வை வகை செய்தே ஆட்சி மாற்றி அந்தமிழ் பேணித் துன்ப மகற்றுநா ளெந்த நாளோ? நானிலந் தமிழை யேற்று நந்தாத சீருண் டாக்கி மாநில மக்கட் கெல்லாம் மணித்தமிழ்ப் பேசச் சொல்லி ஈநில நூற்க ளெல்லாந் தனித்தமிழ் இயம்பல் தானே நாநில மீதுகாணு நற்கனா தமிழ்த்தா யம்மா? பசிப்பிணி பஞ்சம் என்றே பாடுடை மக்கள் கூற புசித்தினி யெஞ்சோ மென்றே புவிமிசைச் சிலரே வாழ