பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ருக. ருரு. ருக ருள். ருஅ. 1 விசித்தழு குழவி தாங்கி வெம்பசி மடியிற் றாங்கி விசித்திலா வேழைக் கெந்நாள் வாழ்வுசேர் நாளோ அம்மா! 'பாருக்கோ ரரசுசெய்து பணிமொழி யமைச்சுண் டாக்கி நேருக்கோர் மொழியை வேண்டின் நந்தமிழ் அரசி லேற்றி ஊருக்கந் தமிழ்ப்பேர் சூட்டி உழைப்பினால் சீர்மை செய்து ஏருக்கித் தரையை ஈந்தே இன்னலஞ் சேர்ப்பா யம்மா! பிறங்கிய நன்னூ லாக்கீர் பீடுறு வினைகள் ஆற்றீர் கறங்குசீ ரடிசேர் அன்புக் கன்னியர் போற்றீர்; தொல்சீ ரிறங்கிய நற்றாய்ப் பேணி ஏறுசீர் நாளுஞ் சேர்த்துத் திறங்குவி நாட்டைக் காப்பீர் தீந்தமிழ்த் தாய்காப் பீரே! (வேறு) புகவொடு புனைவிற் பொருளும், பொருள்தரு தொண்டும் - (புலனார் மகவொடு மனையு மகலா மாண்பொடு பிறவும் மலியத் தகவொடு வாழ்வுந் தகராத் தகைசேர் தமிழும் சூழ அகமொடு புறமு மாநல் லறவாழ் வாழ்த்துக தாயே! (வேறு) பூக்கக் காப் புன்னைக் கோட்டின் மாக்குயிற் பேடுதன்னோ டுக்கக்கூக் குக்கூக் குக்கூ வெனக் குரலெற்றுப் பாடத் தேக்கக்கோ டொன்றிற் கிள்ளைக் கூட்டந்திந் தமிழைப் பேச மாக்கவி நாட்டற் கேயான் மயலுற வேண்டுந் தாயே! (வேறு) பெண்கட்குக் கல்வி வேண்டும் பேதைக்குந் தமிழைச் (சொல்லிக் கண்கட்கே வொளியுண் டாக்கிக் கவினுள்ள பொருளைக் (காட்டிப் பண்புடை யாராய்ச் செய்து பாரினில் யாவர் தாமும் விண்ணொலி யெழுப்பி யுன்பேர் வாழ்த்துநா (ளென்வாழ்நாளே!