பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 17 10. கண்ணொளியை மெய்யொளிர்ப்பக் காதொலியை வாயுதிர்ப்பத் திண்ணணுவில் நெஞ்சாடல் கூத்து. கோடி யணுத்திரளும் கூத்தன் உளக்கயிற்றில் ஆடி வுணர்வியக்கல் கூத்து. வாங்குணர்வை யேந்தி வழங்குணர்வால் காண்பார்க்குள் ஒங்குணர்வைப் பாய்ச்சுவதே கூத்து. அண்ட வியக்கத்தை ஆன்றணுக்கள் ஏற்றியங்கி விண்டு விளக்குவதே கூத்து. நாடித் துடிப்புமுயிர் நற்றுடிப்பும் ஒரிசையுள் ஒடித் துடிப்பெடுத்தல் கூத்து. அணுவோ டனுமோதி யஃதிரண்டாய் விண்டுள் உணர்ந்தாடி வீறுவதே கூத்து. மின்னணுக்கள் வீழ மிளிரணுக்கள் தாமியங்க மன்னுணர்வை யாட்டுவதே கூத்து. புதைத்த உளத்துணர்வைப் பொன்றா வெளியுட் சிதைக்கச் சிலிர்ப்பதுவே கூத்து. 3. இயற் பத்து - நிற்றல் நிலைமாறல் நீடிசைத்தல் ஆடலெனக் கற்றல் ஒடுங்கல் இயல். ஊன்றல் உணர்தல் ஒளியேற உள்ளாடி ஆன்றல் அவிதல் இயல். பிணைதல் பிளத்தல் பிறந்திசைந்தே ஆடி இணைதல் புதைதல் இயல். - தோன்றல் துலங்கலொரு துண்ணணுவாய் மின்னியுளம் நோன்றல் நுடங்கல் இயல்.