பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 24 35 தமிழ்ப் போராட்டம்! பாவலர், யாத்திடும் பாக்களில் பைந்தமிழ்த் திறம்பயில்க! . நாவலர் ஆர்த்திடும் பொழிவிலும் உரையிலும் தமிழ்ஒளிர்க! காவலர் மறத்தொடும் விழிப்பொடும் செந்தமிழ்க் காப்பளிக்க! ஆவலர் தனித்தமிழ்ஆண்மையர் பெண்டிரோ டார்ப்பரிமே! - 1955 மணிநாள் விரைந்தது...! கல்லறைப் பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால் சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார் சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ மல்லறை வாங்கித் தேரும் மணிநாளும் விரைந்த தன்றே! - 1965