பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பாய்புலியே! எங்கே உன் சீற்றம்?

இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழா இங்ங்னே உணர்வற்றிருப்பாய்? - 彦

இங்ங்னே உணர்வற்றிருப்பாய்?

தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது;

தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது; மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது? மாளாத துயரையா உன்மரம் காய்த்தது? இன்)

வள்ளுவர் பிறந்தும்ஈ ராயிரம் ஆண்டுகள்

வந்தன; போயின; எத்தனைத் தாண்டுகள்? கொள்ளுமுட் பகைகளே அடிமையின் கூண்டுகள்; கூடினை யாயின் உன் பகைவரோ பூண்டுகள்! இன்)

எத்தனை எத்தனை.விடுதலைப் பாட்டுகள்!

இற்றன வோஉன்றன் கல்மனப் பூட்டுகள்! ஒத்தெழுந் தனையெனில் என்செயும் வேட்டுகள்? உடைந்துதுரள் ஆகாவோ பகைவர்கால் மூட்டுகள்?

குலப்பிரிவின்னமும் உனைவிட்ட தில்லையே!

கிறுகூறாய்ப்பிரிந் திருப்பதால் தொல்லையே! மலப்புழுப் போலேனும் நெளிந்தாயா? இல்லையே! மனத்துவை:மறவாதே! உனக்கிது எல்லையே! இன்)

மாந்தரின் இன்த்துள்ே முதல்வன் நீதான்

மற்றிந்நாள். உலகினில் கிடையவ்ன் நீதான்! வேந்தன்iம் அன்றுநீ எனின், இன்றோர். ஈதான், வெட்கிலை யாமனம்? பிறர்க்கு நீ சீ தான்! இன்)

பிறர்க்கிலா இலக்கிய இலக்கணங் கொண்டனை!

பின்வரும் உல்குக்கும் அறம்முன்பே விண்டனை! மறக்கிலா ஒளிவாழ்வும் முன்பே கண்டனை! மற்றதற் கோஇந்நாள் அடிமையாந் தண்டனை இன்)

பொய்ம்மையே பட்டெனப் போர்த்திக்கொண் டாயா?

புளித்ததும் நுரைத்ததும் தின்னநீ நாயா? மெய்ம்மையே அறமென்ற செந்தமிழ்ச் சேயா? மேய்வதே வாழ்வெனச் சொல்வதுன் வாயா? இன்)