பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

33

இறுதிப் போர்!

ஆடினை ஆயிரம் பாடினை ஆயிரம் ! ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம் அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்? தமிழா! அடதமிழா - நீ - அழன்றெழு: அரிமா நடையிடு! வினைமுடி! அதுதான். செந்தமிழ்த் தாயுரம்: வீசினை கைகளை; விளைத்தனை சொற்களை, விலக்கினை யாகுல மதமெனும் புற்களை ? விளைத்திட டா,தனித் தமிழெனும் நெற்கள்ை! தமிழா! அட, தமிழா நீ . - - - விரைந்தெழு! வரிப்புலி நடையிடு; துணிவொடு! வீழ்த்திடு வாய்,பகைப் பற்களை ". . . . உன்னுடன் பிறந்தவன் உனையெதிர்க் கின்றான்; உன்பகைக் கேசெருப் பாய்உழைக் கின்றான்; உங்களை இரண்டாக்கி ஆரியன் வென்றான்!

தமிழா, அட..தமிழா - நீ -

உடன்விழி! களிறென நடையிடு; முனைவொடு! உயிர்ப்பிலா விடில், அவ்ன் கொன்றான்!)

ஆரியப் பார்ப்பனன் திருந்தினான் என்றே

ஆருனக் குரைத்தனர்; அவன்குணம் ஒன்றே: அவனுடற் பூணுரலும் உரைதரும் நன்றே: தமிழா, அடதமிழா -நீ ஆர்த்தெழு! ஏறென நடையிடு! வலிவொடு அகப்பகை விலக்குக இன்றே! -

எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!

இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!

இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே! தமிழா! அட தமிழா - நீ - இணைந்தெழு, இடியென முழுங்கிடு! நூறிடு: இலையெனில் தொலைந்ததுன் பேரே!.

- f 969