பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

68

106

உயர்வடைதல் என்றோ?

எதையெதையோ பேசுகின்றார்; செய்கின்றார்! நாட்டின் இருண்டநிலை மறையவில்லை; தாழ்வகல வில்லை! புதைகுழிகள்; ஏமாற்றுப் புனைவுகள்:பூ சல்கள்! பூத்துவரும் முன்னேற்றம் தின்கின்ற நாய்கள்! கதையெழுதி இழிவெழுதிக் கயமைவிளைக் கின்ற கழிசடைகள்! மலக்குழிகள்! பணந் தின்னும் பேய்கள்! -பதைபதைக்கும் நெஞ்சோடு நாட்டைநினைக் கின்றேன். பைந்தமிழர் வாழ்வுநிலை உயர்வடைதல் என்றோ?

நாகரிகம் எனும் பெயரால் நசித்துவரும் உள்ளம்.! நரிக்கூட்டம் ஆடுகின்ற அரசியல்கூத் தாட்டம்! . வேகின்ற வறுமையிலே சாகின்ற உயிர்கள்! வெறித்தனங்கள்! அதிகாரம், பதவிக்கொண் டாட்டம்! வாகுபோ கற்றநிலை! வழவழப்புப் பேச்சு! வழிவழியாய் அரித்துவரும் குலசமயக் கூச்சல்! -நோகின்ற நெஞ்சோடு நாட்டைநினைக் கின்றேன், நொந்துவரும் எந்தமிழர் உயர்வடைதல் என்றோ?

- 1971

அயல் நாட்டில் வாழ்கின்ற தமிழர்க்கு...!

தமிழினத்தீர்! உலகெங்கும் சிதர்ந்தோடி னாலும் தம்நிலத்தை, தம் இனத்தை மறவாமல் என்றும் அமிழாது வாழ்கின்ற தாய்க்குலத்தீர்! நீங்கள் அயல் நாட்டில் - அயலினத்தில் - அயல்மொழிகட்

(கிடையில் சிமிழாது நிலைநின்று, தமிழ்மொழியைப் பேணிச் சிறப்புறவே காத்துவரும் பெருமையினை நோக்கின் கமழாத உளத்திலெல்லாம் கற்பூரம் நாறும்! களிப்பிலா நெஞ்சிலெல்லாம் மயிலாடிக் கொஞ்சும்! 1