பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

旬7

கடலோடி னாலுமன்னைத் தமிழ் ஓடா நெஞ்சும், காசு பணம் சேர்த்தாலும் பழிசேர்க்கா வாழ்வும், உடலாடிச் சாய்ந்தாலும் சாயாதற் பண்பும், உயிராடிக் குலைந்தாலும் நிலைகுலையா உரனும், குடலோடும் நீருக்கும் சோற்றுக்கும் என்றே குரலோட்டம் மாறாத மாண்பும் உடை யீர் - என் மடலோடும் உணர்வோடும் பாட்டோடும் உங்கள் மனத்தோடும் உள்ளுணர்வில் குளித்தாடு கின்றேன்! 2

அயல்நாட்டில் வாழ்கின்ற தமிழினத்தீர்! உங்கள் அடிபணிந்து வேண்டுகின்றேன்; என்றும், எக் காலும் கயல் நாட்டை பாண்டியனின் கன்னித்தமிழ் நாட்டை, கழனிமிகும் சோழனது புலியுலவும் நாட்டை, புயல் நாட்டை - கருமுகில்கள் மலைசூழ்ந்து நிற்கப் புனக்குறவன் வில்லெடுக்கும் சேரனது நாட்டை, வயல் நாட்டை - தமிழ்நிலத்தை மறவாதீர்! நாமும் வாழ்ந்துகெட்ட வரலாற்றை நொடியும்மற வாதீர்! 3

செந்தமிழை மறவாதீர்! மறவாதீர்!! உள்ளம் சிலிர்த்தாடும் தமிழினத்தை மறவாதீர் என்றும்! நொந்தவுளத் தோடுங்கட் குரைக்கின்றேன். இதனை! நொடிந்தவினம் தமிழினம்போல் விரியுலகில் இல்லை. சொந்தமொழி, சொந்தஇனம் தமைப்பார்த்துத் தமிழன் சொத்தை மொழி - செத்தவினம் எனப்பேசு கின்றான்! வந்தமொழி, வந்தவினம் தமக்கடிமை செய்வான்; வாழையடி வாழையென அடிமைதலங் கண்டான்! 4

தன்னுணர்வைக் கட்டவிழ்த்தான்! தன்மானம் விட்டான்! தாழ்ச்சியிலாப் பெருமொழியை வீழ்ச்சியுற வைத்தான்; முன்னுணர்வைத் தானிழந்தான்; மொய்ம்புகழைக்

(கொன்றான்; முக்கழகச் சீர் மறந்தான்; பேர்மறந்தான்; இக்கால்