பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

இப் பதிப்பு முழுமையான பதிப்பாக வெளிவருகிறது. அவ் வகையில் இதுவே முதற் பதிப்பு எனலாம்.

பாடல்கள் அனைத்திற்கும் முன்னைப் பதிப்பின் போக்கிலேயே தொடர்ந்து பாடல் விளக்கக் குறிப்புகள் எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளளன.

இயற்றப்பெற்ற அல்லது வெளிவந்த காலத்தையொட்டி ஆண்டு, மாத முறைப்படி பாடல்கள் வரிசைப்படுத்தப் பட்டிருப்பது இப்பதிப்பின் தனிச்சிறப்பாகும்.

பழைய பாடல்கள் சில எழுதப்பெற்ற காலம் தெளிவாகத் தெரியாமையால், அப்பாடற்குரிய ஆண்டையொட்டி வினாக்குறி யிடப்பட்டுள்ளது. -

இக் கணிச்சாற்றில், தமிழ் மற்றும் இந்தி யெதிர்ப்புப் பற்றிய பாடல்கள் முதல் தொகுதியாகவும், இன எழுச்சிப் பாடல்கள் இரண்டாந் தொகுதியாகவும் அமைந்துள்ளன: நாட்டுரிமை பற்றிய மூன்றாந் தொகுதியில் தமிழகம், தமிழிழம், இயக்கம் என்னும் பிரிவுகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன: பொதுமை, இளைய தலைமுறை ஆகியன பற்றிய பாடல்கள் நான்காந் தொகுதியாகவும், குஞ்சுகளுக்கு, பறவைகளுக்கு, மணிமொழி மாலை என்னுந் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் ஐந்தாந் தொகுதியாகவும் கொள்ளப்பெற்றுள்ளன; ஆறாந் தொகுதியாவது காதல், இயற்கை, இறைமை என்னும் பிரிவுகளைக் கொண்ட பாடல்கள்; தன்னிலை விளக்கம், பெருமக்கள் சிறப்பு - கையறு நிலை, திருநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து, மதிப்புரைகள் முதலியனவாகிய பாடல்கள் ஏழாத் தொகுதியில் வைக்கப் பெற்றுள்ளன. பாட்டரங்கப் பாடல்கள் எட்டாத் தொகுதி.

திருவாளர்கள் மறை. நித்தலின்பனார், ந. முத்துக்குமரனார், க. ஆகுன்றன் (கோவிந்தசாமி) தென்மொழி ப. துரையரசன், கோ. ப. சிரங்கசாமி, இரா. கந்தசாமி, மா. ஆறுமுகம், தமிழ்மகன், - பேரா. வி. இராசமாணிக்கனார், கு. வெ. கி. ஆசான் ஆகியோரான முதற் பதிப்பு வெளியீட்டுக் குழுவினர் பத்துப் பேரும், பங்குத் தொகை உரு. 1000/= மேனி அரைப் பங்கு, ஒரு பங்கு, இரு பங்கு என்னும் அடிப்படையில் தொகுக்கப்பெற்ற

سمبسوريا والنمسائنس