பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தமிழ்த் தொண்டர் அறிந்திடுக!

எந்தமிழர் மொழிநலத்தைக் காக்கின்றார் எவரவரே எமக்கிங் காசான்; எந்தமிழர் இனநலத்தைப் பேணுகின்றார் எவரவரே எமக்குத் தோழர்; எந்தமிழர் உரிமைபெற உழைக்கின்றார் எவரவரெந் தலைவர்; என்றும் எந்தமிழர் பழம்பெருமை மீட்கின்றார் எவரவர்க்கே தொண்டர் யாமே!

தமிழர்ஒரு தவறு செய்தால், தமைப்பெரிதாய் எண்ணியதைத் தமுக்க டிப்போர் . நமிலிருப்பர்; நாமவரை இனங்கண்டு நகல்வேண்டும்! நன்மை எண்ணி உமிமலையில் ஒரரிசி கண்டாலும் அதைப்பொறுக்கி உயர்வு செய்யும் அமிழ்தமனங் கொண்டவரே இனங்காப்பார்; அவரையும்நாம் அறிதல் வேண்டும்!

தக்காரும் தகவிலரும் தம்செயலால் தமில்தாமே உயர்வர்; தாழ்வர்! பொக்காரும் சிற்சிலகால் மணியார்போல் பொலிவிப்பர்; உணர்தல் வேண்டும்! முக்காலும் முழுப்பொய்யை வாய்ச்சரக்கால் மூடுவதும் முடியா தன்றோ? - ‘. . . . . . . எக்காலுங் குறையாத கொள்கை,வினை எவர்க்குண்டோ அவரே எம்மோர்!

நந்தமிழர் நலம்பேணும் நாட்டமவர்க் குண்டாயின் நாத்த டிந்து செந்தமிழின் நலங்காப்பார் தமையொருவர். சிறுமைசெய எண்ணு வாரோ? வெந்தழியும் உள்ளத்தால் பிறருயர்வை வியக்காமல் வெயர்ப்பார் தம்மை எந்தமொழி யாலுயர்த்த-எந்தமொழி யால்திருத்த - எண்ணு வோமே?