பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

129

சொல்லெவர்க்கும் கைக்கு வரும்; மைக்குவரும்! ஆனாலும் சொல்லுஞ் சொற்கள் . வல்லவரைக் காட்டிடுமோ, வினையல்லால்? வருங்காலம் சமைக்கும் பாங்கில் வெல்லவரும் பெரும்படையும் விரிசலுறின் பகைக்கிங்கே வேறென் வேண்டும்? நல்லவற்றைப் போற்றுங்கள்; அல்லவையோ அவைதாமே நலிந்து போகும்!

செந்தமிழ்க்குத் தொண்டுசெய்ய வருவார்க்கொன் றுரைத்திடுவேன்! "சிறப்போ தாழ்வோ எந்தமுடி வானாலும் ஒருமுடிவோ டிறுதிவரை இளைக்கா நெஞ்சும் - சொந்தமுனைப் பில்லாமல் அயல்நிலத்தில் விளைத்தறுக்கா மானச் சூடும் - - வந்தவிளை வெஃதெனினும் உவந்தேற்கும் மனவலிவும் - வளர்தல் வேண்டும்!”

வினைவல்லார் இருப்பரெனின் அவர்திறத்தால் தமிழ்காக்கும் வினையைச் செய்க! - -- புனைவல்ல சொல்திறமை உண்டென்று r பொய்புளுகு புனைதல் வேண்டா!. > - பனைவல்ல பெருந்திறலும் தினைப்பகையால் பயனற்றுப் போதல் நன்றோ? - நினைவில்லை; பேச்சில்லை; செயலன்றோ நெடுங்காலம் நிகழ்த்தல் வேண்டும்!

ஒருவினைக்கே நமக்கொருவர் ஒத்துவர வில்லையெனில் ஒதுங்கிச் செய்க! தெருமுனையார் பரிமாறும் சிறுசொல்லால் மற்றவரைத் திட்டித் தீர்த்தல் எருவினிலே நஞ்சுகலக் கின்றசெயல்: எழுந்துபயிர் விளைதல் எங்கே? பெருமுனைப்பால் பிறர்விளைவை எள்ளாதீர்! பேருழைப்பே பெருமை சேர்க்கும்!