பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

பாடல் விளக்கக் குறிப்புகள்

-இன எழுச்சி

1.

13.

தமிழ்நிலத்தை மீட்கப் பெரும்படை நடப்பதாகக் கற்பனை செய்துகொண்டு எழுதப்பெற்ற போர்ப்பாட்டு இது. . ஆசிரியரின் மூச்சு வீச்சு, ஆவல். ஏவல் - இவையென்பது.

பாவலர் தாம் எழுதும் பாக்களில் பழைய முறைக் கருத்துகளையே பின்பற்றாமல், மக்களுக்கு நலம் சேர்க்கும் கருத்துகளையே எடுத்தாளுதல் வேண்டும் என்றது.

தமிழ்ப் போருக்குத் தமிழ்க்குலத்திற்கு விடுத்த அழைப்பிது. குயிலைப் பார்த்துக் கூறியனவாக எழுதப்பெற்ற கொள்கைப் பாக்கள்.

1953-ஆம் ஆண்டின் இடையில் அன்றைய சென்னை முதலமைச்சர்

திரு.இராசகோபாலாச்சாரியார், தொடக்கப்பள்ளிப் பிள்ளைகளைத் தம்தம் குலத்தொழில்களைப் பாதிநேரமும், கல்வியைப் பாதிநேரமும் கற்கச்

செய்யச் சட்டம் கொண்டு வந்தார். அதை மக்கள் எதிர்த்தனர். அவர்களைச் சின்ற செய்தும், சுட்டும் வந்தனர். அக்கால் 'பகுத்தறிவில் எழுதி வெளிவந்த பாடல்.

தமிழின் பெருமையும், தமிழர் சிறப்பும் இக்கால் நலிவுறுதல் கண்டு

அதன் எழுச்சிக்கு என ஆர்ப்பரிக்கத் தமிழ்ப்புலவர், மாணவர், வல்லுணர்வினர், அன்னையர், ஆடவர் அனைவரையும் அழைக்கிறார் பாவலரேறு.

கழகப் பேரிலக்கியங்களின் சிறப்புக் கூறி அவற்றை மறத்தலியலாதெனக் கூறும் பாடல். இயற்கைச் சிறப்புடைய இத் தமிழ்த்திருநாடு சிறக்க உழைத்திடல் வேண்டும். நாடுய்ய நினைப்போர் இதை மறப்பரோ? - என வினவுகிறார் பாவலரேறு. தமிழகத்தின் ஆட்சி சீர்கேடாக அமையும் என்றால் தமிழர்கள் என்றென்றைக்கும் தில்லியருக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான். பாட்டைப் படித்துப் பாருங்கள். தமிழர் பெறவேண்டிய ஐந்துறை முன்னேற்றங்கள் இதில் நிரல்படக் கூறப் பெறுகின்றன. வானம்பாடி' என்னும் பாட்டிதழ்க்காக எழுதப்பெற்று அதில் வெளிவந்த பாடல் இது எங்கும் எதிலும் தமிழே வேண்டும் என்பது. தமிழரைத் துயிலெழுப்பும் அழகிய பத்துப் பாடல்கள் இவை.

~55ft: