பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£105.

163

வழியைப் பற்றி வருவாய்!

வானும் கதிரும் நிலைதிரிந்தே - ஒரு வன்மை நெருப்பாய் நிலம் உமிழ்ந்து கானும் கடலும் உருவாகிப் - பெருங் கல்லும் பொடிந்து மண்ணாகி, - ஊனும் உயிரும் தோன்றுகையில் - ஓர் ஒற்றைத் தமிழா நீ பிறந்தாய்! . கூனும் நிமிர்ந்தாய்! மொழிவிளர்ந்தாய் - பெருங் குன்றும் காவும் நடை கடந்தாய் !

மனமும் கண்டாய் ! ஒளிகண்டாய்! - இம் மண்ணும் விண்ணும் நீயளந்தாய்! இனமும் பெருகி மொழி பல்கி - உல கெல்லாம் திரிந்தாய் ! நீ விரிந்தாய் !

புனமும் புலமும் உழவெடுத்தாய் -பெரும் புலமை இலக்கியத் திறம்பெற்றாய்!

கனமும் இரும்பும் நீகண்டாய்! - வினைக் கருவிகள் செய்தாய், வாழ்ந்திருந்தாய்!

முறைகள் கண்டாய்; நெறிகண்டாய் - வளம் மூத்தாய் வாழ்க்கை அறங்கண்டாய்! . . . . . குறைகள் தெளிந்தாய்; அறிவுயர்ந்தாய் - கலைக் கூறுகள் கண்டாய்; மகிழ்கொண்டாய்! மறைகள் உணர்ந்தாய்; புலனுயர்ந்தாய் - இம் மண்ணும் விண்ணும் தொடர்பறிந்தாய்! - ..."

இறைமை தேர்ந்தாய்; பொறிகழன்றாய் - உள

ஏற்றம் பெற்றாய் ! உள்ளறிந்தாய்! .

ஏற்றம் பெற்றும் அறிவுயர்ந்தும் - நிலை இழிந்தும் தாழ்ந்தும் கிட்க்கின்றாய்! தோற்றம் சிறந்தும் உயர்விருந்தும் - உன் தொன்மை மறந்தே உழல்கின்றாய்!

வேற்றினம் உன்னை இழித்த்துக்ாண் -பெரும் வெற்றிக் குவிப்பை அழித்ததுகாண்! o -

மாற்றம் பெறவும் விரும்புகிலாய் - தமிழ் மகனே! விழிப்பாய்! எழுந்துயிர்வாய்! -