பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 170

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

அனைவர் முன்னம் அறைகூவு கின்றேன்! புனைவுரை இல்லை; பொய்யுரை இல்லை! 'அர்த்த முள்ளதா இந்து எனும் அழிமதம்? பித்தக் குடியனின் பிதற்றுரை மெய்யா?

ஏற்றமென் போரே இந்து மதமெனும் நாற்றச் சாய்க்கடை நச்சுப் பொய்கை மக்கள் வாழ்க்கை நலத்துக் குதவுமா? ஒக்க அதனுள் இருத்தலும் ஒப்புமா?.

வேதம் புராணம் இதிகா சமெனும் தீதுரைத் தொகுப்புகள் தீண்டாமை நீங்க வழிவகை செய்யுமா? வாழ்வை உயர்த்துமா? இழிவகை உரைகள் இனியும் பொருந்துமா?

ஓரினம் பிழைக்கவே உதவும்.அந் நூல்களின் வேரினி லன்றோ வேற்றுமை முளைத்தது: மக்களை நூறு பிரிவுக ளாக ஒக்க வகுத்திடும் நூல்களும் உயர்வோ?

'இந்து மதம்'எனும் இழிமதம் ஒழிக! தந்தம் முயற்சியால் தனிவாழ்வு பெறுக! மதமும் சாதியும்.மாய்ந்துபோகட்டும்! புதுமை அறிவியல் பூத்துக் குலுங்குக! பொதுமை நிலவுக! புதுக்குக, உலகையே!

30

35

40

45

50

-1981