பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

十邯2 எரிந்து சாம்பலாகட்டும்!

மனுநூல், - எரிந்து சாம்ப லாகட்டும் ! - நம் இன இழிவு நீங்கட்டும்! - இங்கு எல்லாரும் சமமெனும் நிலை இறுதி ஆகட்டும்! - ஆழ்ந்த

இருள் போகட்டும்! (மனு)

உரிந்து போன தோல்களுமாய் உடைந்து போன எலும்புமாய் - நெஞ்சம் கரிந்து போன தமிழர் வாழ்வு

கசடு நீங்கிப் பொலியட்டும்! மனு)

தெரிந்து செய்யும் கொடுமைகளால் தீமை சேர்க்கும் கயமையால் - வாழ்வு சரிந்து போன தமிழரினம் - சம உரிமை ஏற்கட்டும்! - (மனு)

தாழ்ச்சி நீங்கி, மாட்சி ஓங்கத் தமிழர் ஒன்று சேரட்டும்! - பகை வீழ்ச்சி பெற்று மாய்ந்து போக விளைச்சல் உறுதி ஆகட்டும்! (மனு)

வேதம் ஒழிக! புராணம் ஒழிக! வேற்றுமைகள் நீங்குக! - இழி சாதி ஒழிக, மதமும் ஒழிக!

சமன்மை பொதுமை ஓங்குக: '

- 1981

171