பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

172

கெடுதலை உலகம்!

கெடுதலை நிரம்பிய உலகமிது - அதன் . கீழ்மையை வேரறுப்போம் - மக்கள் விடுதலை பெற்றுய்ய வேண்டுமன்றோ - மூட வழக்கத்தை நாருரிப்போம்! -

மடுவும் மலைகளும் மக்கள் நிலையினில்

மண்டிக் கிடப்பதுவோ - நலங் கெடவும் உயிர்க்குலம் இங்கொரு மூலையில்

கிடந்து துடிப்பதுவோ? (கெடுதலை) வானுயர் கூடங்கள் மாடங்கள் ஒர்புறம்! வாழ்க்கை நலன்கள் பல - அட! ஊனுடல் நாறும் எலும்புகள் ஒர்புறம்! உப்பும் புளியும் இல! (கெடுதலை) சாதி மதங்களும் சாத்திரப் பேய்களும் சழக்கர்கள் சூழ்ச்சிகளாம்! - தலை மோதி உடைவதும் மேன்மை குலைவதும் செந்தமிழ் வீழ்ச்சிகளாம்! " (கெடுதலை

ஆண்டிட வந்தவர் மக்கட் பயிர்களை அழுகிடச் செய்தனரே! - பலர் மாண்டிடத் தாம்வளம் பூண்டனர்; ஏழையர் வாழ்க்கையைக் கொய்தனரே! (கெடுதலை) மேன்மைதருந் தொழிலாளர் இனங்களை வேறுபடுத்தினரே! - கொடுங் கோன்மை புகுத்தி உரிமை எழுச்சியின் குரலை நெரித்தனரே! (கெடுதலை)

- 1981