பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 - மொழி, இனம், நாடு!

மொழி, இனம், நாடு - உயர் முன்னேற்றம் தேடு! - பெரும்

பழியறியாத் தமிழர் புகழ் - பண்ணமைத்துப் பாடு! (மொழி) அழிவு செய்யும் தீமைகளை ஆழப்புதைப் போமே! - நன்மை

குழவிதைப் போமே!

இழிவு கூறும் சாதிமத இன்னல் அழிப்போமே! - சூழும் இடர்கள் ஒழிப்போமே! (மொழி) பொதுமை நலம் பூத்திட - ஓர் புரட்சி காணுவோமே! - பெரும் புதுமை பூணுவோமே! புதுமை வளம் அறிவு பெருக போக்கை மாற்றுவோமே! - சம நோக்கை ஏற்றுவோமே! (மொழி) நலிவு சேர்க்கும் மடமைகளை நடுவில் வைத்துக் கொளுத்துவோம் - நல் லறிவை நாளும் வழுத்துவோம்! வலிவுதேக்கும் தாய்மைத்தமிழை வாழ வைத்துப் போற்றுவோம்! - நம் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்! (மொழி)

- 1982

177