பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

179

ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம் அளிசேர் எங்கள் அருமைப் பெரியார் பேசிய பேச்சுகள் நச்சுகள் என்றால் - ஊசிய கருத்தை உரைத்த புராணங்கள், வேத அழுக்குகள், பொய்ம்மை விளக்கங்கள் - ஊதை உளுத்தைகள் நச்சிலா உரைகளா? 40

ஆரிய மாயையில்அழுந்திக் கிடந்த வீரியம் குறைந்த திரவிடர் விலாவில் செந்தமிழ் மறத்தைப் பாய்ச்சிட இராப்பகல் அந்தமிழ் பேசிய - எழுதிய - அண்ணா பரப்பிய கருத்துகள் நச்சுகள் என்றால் - சுரப்புடைப் பார்ப்பனர் சொன்னவை எல்லாம் நச்சிலா உரைகளா? நன்மைதந் தவையா? கச்சி உருவம் கதைத்தது சரியா? என்னஇக் கொடுமை? என்னஇக் கூற்று? சின்ன பெரியவாள் செருக்குதான் என்ன? 50

சேற்றில் புழுக்களாய் - சிற்றுயிர் இனங்களாய் - மாற்றிட இயலா மந்தை ஆடுகளாய் - - வழிவழிப் பார்ப்பனர் வந்து புகுத்திய இழிவினை உணரா இழிபிற விகளாய் - ஆரியக் கொடுநச் சரவம் கொத்திச் சீரிய மொழியையும், சிறந்தநல் லறிவையும், ஆயிரம் ஆயிரம் அறிவுநூல் தொகையையும், ஏயுநல் லிலக்கிய இலக்கண இயல்பையும், நாகரிகத்தையும் நல்லபண் பாட்டையும், ஆகிய அரசையும் ஆட்சி நலத்தையும், . 60

ஒருங்கே அழித்துக் கொண்டஒர் இனத்தைப் பெருங்கொள் கையினால் பிழைக்க வைத்த - தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை, மண்மானங் காத்த மாபெரும் மீட்பனை, அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய பெரியார் என்னும் பெரும்பே ரரசனைஇழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா? பழிப்புரை வந்துநம் செவிகளிற் பாய்வதா?