பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

நச்சு விதைகளா. நயந்து அவர் சொன்னவை? பச்சிலை மருந்தன்றோ, எமக்கவர் பகர்ந்தவை? 70 பார்ப்பனப் பதடிகள் எம்மைப் படுத்திய ஆர்ப்பொலி அடங்கியது அவரினால் அன்றோ? ஆரியக் குறும்பர்கள் ஆக்கிய கொடுமையின் வேரினைத் தீய்த்தது அவர்வினை யன்றோ?

மக்களுள் மக்களை வேறு பிரித்துத் தக்க அவர் அறிவுக் கண்களை அடைத்து, மடமைச் சகதியில் - மடிமை இருளினுள்கடமை தவிர்த்த கரவுச் சேற்றினுள் புதைத்த பார்ப்பனர் புன்மையைத் தடுத்துச் சிதைத்தவர் அல்லரோ ஈரோட்டுச் செம்மல் ? 30 அவர்தம் முயற்சியை அடியொற்றி நடந்து தவறிலாத் தமிழர் ஆளுமை தழைத்திட உழைத்தவர் அல்லரோ அண்ணா உயர்மகன்? இழைத்தஇவ் விருவரும் உரைத்தவை நஞ்சா?

இப்படி இங்கோர் ‘எருமை சொன்னால் எப்படித் தமிழர் இதனைப் பொறுப்பது? 'வீரப் பன்கள் வேண்டு மானால் 'மாறப்பன் களாகி மண்ணைக் கவ்வலாம்! யாரப்பன் என்று தெரியாதா பிறர்க்கு: சேரப்பன் ஒருவன், சினையப்பன் ஒருவனா?, பாரப்பா தமிழா பார்ப்பனன் மொழிவதை? 90 வீரப்பர் போனால் விறலப்பர் இல்லையா? வேதஆ கமங்கள் - விரிந்தபு ராணங்கள் - சூதுஇதி காசங்கள் - சூழ்ச்சிசெய் மனுக்கள் - இன்றைக்குப் பார்ப்பனன் எழுதும் இழிவுகள் - என்றிவை யாவுமே இனியவை ஆகுமா? பெரியார் அண்ணா வாய்களில் பிறந்தவை. உரிய மக்களுக் குதவிட வில்லையா? . ... :