பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

187

மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்!

மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! - அதில் ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும் எதிர்நின் றிருகை வீசுவேன்!

காசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும் கவின்தமிழ் ஒன்றே பரப்புவேன்! - இதை மாசுள்ளம் கொண்டே மதித்திடார் செயல்கை மண்மே டிட்டே நிரப்புவேன்!

காலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும் காடுமே டெல்லாம் முழக்குவேன்! - என் மேலுள்ள அன்பால் எனைப்பற்று வோர்க்கும் மேலும்மேல் அவ்வினை பழக்குவேன்! உயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும் ஒவ்வோர் அணுவிலும் தமிழ்மணம்! - அவை, அயர்வுற்று மறையினும் ஆழ்வெளி பரவினும் அங்கங்கும் கிளர்ந்தெழும் தமிழினம்!

- # 982