பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

f35

பொதுமுறைக் கொள்கை சாற்றிப்

புலத்தினை மீட்ப தற்குப் புதுநலக் கருத்தைச் சொன்னாய்! பொய்ம்மையென் றுனைஉ ரைத்து முதுகினில் குத்து கின்றார்! முகத்தினில் உமிழு கின்றார்! இதன்மேலும் விளைவுக் கென்றோ ஏங்குவாய், தமிழ நெஞ்சே!

குழைவரும் கூடு வாரும் கும்பிட்டு வணங்கி அன்பில் இழைவரு மாகப் பல்லோர் எதிர் வந்த கால மெல்லாம் பிழைவரும் என்றெண் ணாமல் பேசினை நெகிழ்ந்தார்! இன்னும் மழைவரும் பொழியும் என்றோ மயங்குவாய், தமிழ நெஞ்சே!

மனைக்கென மக்கட் கென்ன மனம்,அலை யாமல் முற்றும் வினைக்கென எழுந்த போது விலகினார்; வேறாய்ப் போனார் ! நினைக்கவும் செய்ய வும், நீ ஒருவனே நின்ற போதும் தினைக்கதிர் பனையாம் என்றே நினைத்தாயா, தமிழ நெஞ்சே!

அவிகொளும் இரைக்கும், பொன்னின் அணிகட்கும் மனைக்கும் உள்ளம் தவிகொளும் அலையும் கூட்டம் தமிழ்கொளும் உணர்வில் ஒன்றாய்க் குவிகொளும் கொள்கை கொள்ளும் கூர்ப்புரை என்றோ ஒர்நாள் - செவிகொளும், எழும் செய்ம் - என்றோ தேம்புவாய், தமிழ நெஞ்சே! -