பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

147

215

இசைத்தெண்ணி அதைத்தவிர்ப்பீர்! எச்செல்வம் எவ்வறிவோ - டிருந்திடினும் இகழ்ந்து செல்வீர்! திசைத்துலவும் இவ்வகையில் தமிழரென்று பலபிறவி திரிதருமால் தேர்ந்து கொள்வீர்

- 1989

வீரராய் நிமிர்ந்து இனப்பணி ஆற்றுவீர்!

ஏளனப் படுத்துவர்; இகழுவர்; புண்பட இழிவுரை பற்பல கூறுவர்! கேளெனப் படுத்தவர் கிளைபல மாறுவர்; கீழ்மைப் பழிகளைச் சுமத்துவர்! வாளெனக் குட்ைகுவர்; வருக வருகென வரும் பகைக்(கு) அடைத்ததாழ் திறக்குவர்: தேளெனக் கொட்டுவர்! திகைப்பிலாது இனப்பணி - செய்து அருங் கடமையை ஆற்றுவீர்!

கொஞ்சமும் அன்பிலாக்

கொடுமையின் வெதுப்பொடு

கொள்கையைப் புதுவதாய் அலசுவர்! வஞ்சமும் இரண்டக