பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158.

229

சட்டிக்குத் தப்பி, நெருப்பில் விழுந்தது தமிழகமே!

வட்டிக்குத் தேம்பி, முதலை இழந்திடும் வறியர்களாய் - மட்டித் தனமாய்க் கவர்ச்சியில் மயங்கிடும் மடித்தமிழர்எட்டிக் கொட்டையில் இனிப்பைச் சுவைத்திட இசைந்து விட்டார்! சட்டிக்குத் தப்பி நெருப்பில் விழுந்தது தமிழகமே! -

வெட்டிக் கொண்டு செத்திடும் நரவெறி வீம்பர்களாய் -

கட்டிக் கொண்டு கடலில் இறங்கிடும் களியர்களாய்முட்டிக் கொண்டு முரண்பட்டு) அலைந்து முடிவினிலே " தட்டிப் பறிக்கும் தலைமையின் கால்கீழ்த் தங்கினரே! l

"எதற்கு ஏன் எதை எவ் வாறு-என

எண்ணும் உணர்வில்ராய்

'முதற்கோள் என்ன முடிவுகொள் என்னெனும் முனைப்பில்ராய்ச் சிதற்காட் பட்ட் சுவடியாய்ச் --

சிற்சிறி தாயழியும்

முதற்றாய்த் தமிழினம் முழுவதும் அழிவுற முற்பட்டதே!

தப்படித் தாடும் தொம்பருக் காட்டும் தலைக்குரங்காய்ச்செப்படித் தாடும் ஆட்டத்தில்

இழக்கும் சூதர்களாய் -

முப்படித் தாக்கம் நாட்குநாள்

எய்துவர் முழுத்தமிழர்! எப்படித் தேற்றுவோம்? எவ்வகை ஆற்றுவோம் இவர்களையே! - - 1991