பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161,

232.

நேர்மையராய் நெறிவாழ்வீரே!

தமிழ்நாட்டிற் பிறந்தெழுந்து, தமிழ்நாட்டுச் சோறுண்டு, நீரும் உண்டு, - • . . . . தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி கற்றுயர்ந்து, பணிபெற்று, வாழு கின்ற : ' , " . . . - தமிழ்நாட்டுப் பார்ப்பனரே! தமிழ்மொழியைத் தமிழினத்தைத் தாழ்த்து கின்றீர்! தமிழ்நாட்டைத் தில்லியர்க்கே தலைதாழ்த்தச் செய்கின்றீர்! நன்றி கெட்டீர்! ; : *

சாதிமதம் பார்க்கின்றீர்! தமிழினத்தை இழிக்கின்றீர்; சழக்குச் செய்வீர்! ஆதியிலே நும்மவர்கள் அளந்துவைத்த வேதங்கள், புளுகு நூல்கள் ஒதியவா றின்னும் ஏ மாற்றுகின்றீர்! கடவுள்கரு வறையுள் வாழும் வேதியராய்ப்-புரோகிதராய்-விளங்குகின்றீர்; பிறர்நலன்கள் விழுங்கு கின்றீர்!

நடுநிலையாய்-நேர்மையனாய்-ஞாயமொன்று. சொல்லுகின்றேன்; நயந்து கேட்பீர்! பாடுபடும் மக்களெல்லாம் பார்ப்பனர்க்கே அடிமையெனும் பழிமை நீக்கிக் ல், - கேடுகெட்ட சாதிவுணர் வழித்துவிட்டு, மடமைசெயும் மதநோய்.நீங்கி, நீடுபுகழ்த் தமிழோடும் தமிழரோடும் நேர்மையராய் நெறிவாழ் வீரே!

- 1992