பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

233

பைந்தமிழ் நாடு பழம்பெரும் நாடு!

பைந்தமிழ் நாடு பழம்பெரும் நாடு! ஐந்திணை ஒழுக்கம், அருமைத் தமிழ்மொழி, துலங்குநல் இலக்கியம் தோன்றிய நாடு! நலங்கெட இன்று நலிந்தது! அதனை மீண்டும் புதுக்கிட - மேலுறச் செய்திட நீண்ட முயற்சிகள் நிகழ்த்திட வேண்டும்!

மொழிநிலை, இனநிலை, பொருள்நிலை, அரசியல், பழிசே ராத பண்பாடு, கல்வி - எனும்பல நிலைகளில் இளைஞர்கள் உழைத்தே இனம்மேம் பாடுற இயங்குதல் வேண்டும். j (?

இற்றை இளைஞர்கள் எதனிலும் ஊன்றாது வெற்றுச் சருகுகள் வீசிடும் காற்றில் அலைந்து திரிதல்போல் அல்லல் உறுவர்! குலைந்து போகும் குமுகாய நிலைகளைச் சீர்செய் திடவோ சிறப்புறச் செய்யவோ ஒர்எள் முனையும் உழைத்திட விரும்பிலர்!

கால்நோ காது, கைநோ காது - மேல்உடை அழுக்குப் படியாமல் உழைக்கவே இளைஞர் விரும்புவர்; இளமை வீ ணாக்குவர்; விளைவெதும் இல்லை; வீண்ஆர வாரம்! . 20

பெண்களைப் போலப் பீடுஇல் லாமல் கண்களின் கவர்ச்சியே பெரிதென்று கருதி, மேனி மினுக்குதல், மின்னுடை உடுத்தல், கோணி நடத்தல், கொச்சை பேசுதல், ஊர் உலா வருதல், ஒங்கிச் சிரித்தல், ... . சேர்ந்துகை கோத்துச் சிறுநடை போடுதல், கல்லூரிக் கன்னியர், பள்ளிச் சிறுமியர்

செல்கையில் பின்சென்று சிறுசிறு குறும்புகள்

பண்ணுதல்-இவையெலாம் இளைஞர்கள் பழக்கமாய் நண்ணி வளர்ந்து நாட்டை நலித்திடும்! ; : . . .'; 30