பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

திரைப்படப் பெருக்கம் இளைஞரைத் திருப்பி உரைகள், பாடல்கள், ஒழுங்கிலா நடத்தைகள் இவற்றுளே இளைஞரை இழுத்துச் சாய்த்திடும் அவற்றுளே மூழ்கி வாழ்க்கையை அழிக்கும் இளமைச் செல்வரை எப்படி மீட்பது? வளமையாய் அவர்கள் வாழினும், நாட்டுக்கு ஒருபயன் இன்றி உலுத்தராய் வீழ்வர் ! வருபயன் பற்பல வராமல் உள்ளன!

உண்மையில் இளைஞரை அரசும் ஊக்காமல் வெண்மையாய் அவரை விளையாட்டு களிலும், 40 கழிசடைத் திரைப்படக் காமச் சேற்றிலும் அழிவுறும் படியே ஆக்குதல் காண்போம்!

நல்ல சிந்தனை, நறும்பல செயல்கள் வல்ல இளைஞர்க்கு வரும்படி செய்தால் நாட்டு மக்களின் நலம்பல பெருகும்; கேட்டுக் குழிகளில் கீழுறத் தள்ளி மூடிப் போகவே அரசு விரும்பிடும்! வாடிப் போய்விடும் வருங்காலம் என்றே எண்ணி வருந்துவார் எத்தனை யோ, பலர்; திண்ணிய இளமையைத் தீமை அழிப்பதா? 50 அருந்தமிழ் இளைஞரே! அருமை மறவரே! வருந்தமிழ் நாடு வளர்ச்சி பெற்றிட எண்ணிப் பார்மின் ! எண்ணிப் பார்மின் ! மண்ணில் தமிழினம் மாபெரும் பேரினம்! அத்தகு நல்லினம் அழிந்துகொண் டுள்ளதே! எத்தகு பெருமைகள் சிறப்புகள் எல்லாம் இவ்வினம் பெற்றே இருந்த்தை அறிவோம்! செவ்விய வாழ்க்கையின் சீரெங்கு போனது? இன்றுநிலை என்ன? இழிநிலை அன்றோ!. குன்றுமண் ஆனதாய்க் குன்றிப் போனது 60 இளைஞர் உலகம் எழுந்துமுன் வருக!

இளைஞரைக் காக்க! கேடுகள் சாய்க்க:

- 1993

234