பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

235

தமிழினம் விழித்தெழுமே!

பிடிக்கட்டும் பிடிக்கட்டும் என்றிருந்தார் - அட பிடித்தெமை உள்ளேயும் வைத்துவிட்டார் அடிக்கட்டும் அடிக்கட்டும் என்றிருப்பார் - எமை அடிக்கவும் செய்குவார் உயிர்சிதைப்பார் !

எம்மினத் தமிழரின் பதைபதைப்போ - என்றும் இந்நிலை மாறாது! புதுவியப்போ? அம்மி நகர்ந்தாலும் நகர்ந்துவிடும் - இன அடிமைகள் என்றென்றும் அசைவதில்லை!

தன்மானம் கெட்டனர்; மதிகெட்டனர் - தம்மின் தசையாடும் என்பார்கள்! தரங் கெட்டனர்! - என்னானும் ஆகட்டும்! இழப்பாகட்டும் - எமக்(கு)

என்னதனால் வந்ததென் றுடல்வளர்ப்பார்!

தமிழினம் தனித்தனி இனமானது - ஆனால் தமிழுணர் வென்றுமே வளமானது! . . . . அமிழாது தமிழுணர்வு என்றாகிலும் - முளை அரும்பாதோ? இனமானம் வளர்ந்திடாதோ?

இருக்கின்ற அத்தனை உருவங்களும் - தமிழ் இனமில்லை என்றாலும் இருக்கின்றேன் நான்! உருக்கின்ற உலையினில் என்னையிட்டாலும் - நான் உருக்குலைந் திடல்என்றும் நேர்வதில்லை! -

கிருப்பவர் ஆயிரம் பேரென்றாலும், ! துன்பேதும் மொழி, இனம் பெறுமென்னிலோ- உள்ளம் துடிதுடித் தெழுந்திடல் உறுதியன்றோ?

என்போலும் கோடியர் இலையென்றாலும் - மற்றிங்

ஆயிரம் இலக்கமும் கோடியாகும் நூறு ஆண்டுகள் ஆயினும் சளைத்தலில்லை! வாயுரம் அன்றிது வரலாறன்றோ? எம் வழிவழித் தமிழினம் விழித்தெழுமே!

- 1993