பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164:

236

தடாகை அரக்கியே!

'தடா எம்மை என்ன செய்யும்,

தடா கை அரக்கியே! - கடா மு டாவென் றாட்சி செய்யும் கன்ன டப்பார்ப் பனத்தியே! (தடா)

அடா வடிச்சட்டம் போட்டும் அரக்கத்தன மும் மேலிடப் படாத பாடு படுத்து கின்றாய்! தமிழினத்தை அழிக்கின் றாய்! குதம்பை உடலும் குலுங்கி டாமல் குண்டு முகம்வா டாமலே மதம தர்ப்பும் சாதிச் செருக்கும் மமதை ஆட்சி செய்கின்றாய்!

தமிழை வாழ வைப்ப தாகத் தருக்கர்க் கீந்து நடிக்கிறாய்! தமிழி னத்திற் குழைக்கும் தலைவர் தம்மைத் தடாவில் வாட்டுவாய்! சூழ்ச்சி, வஞ்சம், தீமை எண்ணம், சொல்லில் மயக்கிச் சுரண்டுவாய்! காழ்ப்பு, கரவு, களவு வெறிகள், கருப்புச் சட்டம் கருவிகள்! தமிழை நசுக்கித் தமிழர் வாழ்வைத் தகர்ப்ப தற்குக் குறிகொண்டாய்! . திமிர்ந்த பேச்சு காவல் வளையம்!

தேர்ந்த தடிப்பு நாடகம்!

சுரண்டிச் சுரண்டிக் கொழுக்கும் உடம்பு 'சொகுசுப் போர்வை! சுற்றுலா வறண்டு கிடக்கும் மக்கள் வாழ்வை வாட்டி வதைக்கும் ஊழல்கள்! ஆட்சி என்னும் பெயரில் நடத்தும் அழிம்பு செய்யும் அரசியல்: மீட்சி யின்றி அழியப் போகும்

மினுக்கிக் குலுக்கும் நடிகையே! - 1993