பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

132 வெற்றிக்குப் பலகோணம் உண்டு என்பதை பாவலரேறு ஐயா அவர்கள்

தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்.

133 தமிழுக்கும், தமிழருக்கும் உழைப்பாரே தம் நண்பர் என்றும், அதற்கு மாறானவர் எந்நிலையர் ஆயினும் அவர் பகைவரே என்றும் அறைந்துரைக்கிறார் ஆசிரியர். ... "

134 பேராசை)சிரியர் ஒருவர் ஐயா அவர்கள்மீது காழ்ப்புக் கொண்டு எட்டப்பராகித் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களில் வெளிவந்த தமிழ்நாட்டு விடுதலை தொடர்பான செய்திகளை யெல்லாம் நடுவணரசுக்குக் காட்டி எழுதிட, ஆசிரியர்மீது பன்னிரண்டு குற்றச் சாட்டினைச் சுமத்தி இந்திய அரசின் செய்தித்தாள் பேரவை 171986-அன்று மடல்வழி விடைகேட்டு எச்சரித்தது.

அதற்கு, "எங்களின் தமிழ் மொழி, பண்பாட்டு, இலக்கியங்களைக் கட்டிக் காக்கவே கட்டுரைகளையும் கருத்துகளையும் வெளியிடுகிறோம். அந்நிலையில் தமிழரல்லாத பிறர் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டுமென்பது எங்களின் நோக்கமன்று" -என்பதாக ஆசிரியர் அவர்களால் நடுவணரசுக்கு விடை எழுதப்பெற்றது.

இச் சூழல்நிலை விளக்கி, தமிழினம் காக்கத் தடையெது வரினும் தயங்கேன் யான் என வீறுரைக்கிறார் நம் பாவலரேறு.

135 வீதிப் போராட்டத்திற்கு வருவோர். எண்ணிக்கை ஒரு விழுக்காட்டையும் கடந்து மிக மிகத்தான் இனம் நாடு உய்யும் என விளக்குகிறார் பாவலரேறு. 136 அக்கால் எழுந்த பல்வேறு தமிழ் இளைஞர் அமைப்புகளையும் கண்டு அவர்க்கு அறிவூட்டலாய்-எங்ங்கன் பாடாற்றுவது எனப் படிப்பிக்கும் பாடல். 137. வலிவில்லாப் பகைவர்க்கு எதிராய் வகைசெய்து போரிட்டால் வருங்காலம்

தமிழர்க்குத் தானே. - 138 மக்கள் எழுச்சிக்கான காரணம் கண்டு அதை நீக்க முயலாமல் அவற்றை

வன்முறை எனும் அரசுக்கு உணர்த்தலாய் அமைந்தது.இப்பாடல். 139 ஊக்கம் இழக்காமல் செயலாற்றிடவும், மக்களுக்கு ஓதி உணர்த்திடவும் வேண்டுமென்று உரைக்கின்றார் ஆசிரியர் "ே 140 தமிழக மக்கள் விடுதலைக்காகப் பல்வகையில் இயங்கிச் செயற்பட்டுச் சிறை சென்ற இளைஞர்களும், அவர்களைத் தொடர்ந்து மக்களும் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறிப்பாய் உணர்த்தியது. இப்பாடல். 14. இழிவுணர்வும், கதையுணர்வும், பொழுதுபோக்குணர்வும் இனவுணர்வைச் சிதைக்கவே செய்யும் - மொழியுணர்வு தோன்றிடாமல் பகை எவ்வாறு வெல்லப்படும் என்கிறார் பாவலரேறு. , - . - - - 12139ஆம் பாடலின் சூழலில் வெளிப்பட்ட பிறிதொரு பாடல் ஒன்றிணைந்து அழிம்புகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வெற்றிகாண அழைக்கிறார் ஆசிரியர்.