பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

உய்யுமோ நாடு, இவ் உலுத்தர் ஆட்சியிலே!

ஆட்சி செய்யும் அரம்பர் கூட்டம் மாட்சி யின்றி மக்களை வருத்திச் சுரண்டிக் கொழுக்கும். சூழ்ச்சியே, இன்றைய வரண்ட கையடி வாயடி அரசியல்! -

திட்டங்கள் என்னும் திருட்டு நடைமுறைக் கொட்டங்கள் அடிக்கும் கொள்ளைக் கூட்டம்!

ஏமாற்று, வஞ்சகம், எத்துகள், புரட்டுகள், மாமாக்கள் மாமிகள் மயக்கிடும் கலைகள், - கொண்டாட்டம், கொம்மாளம், குழிபறிப்பு, இரண்டகம்! திண்டாடும் மக்கட்குத் தெருவோர வாழ்க்கை:

வானத்தை எட்டிடும் வாங்கிடும். விலைகள்! மானத்தை மறைத்திடும் உடைகளோ மலை விலை! கூரை பிய்ந்த குடிசைக்கும் பஞ்சம்! - ஊரை ஏமாற்றி உலையில் போட்டிடும் அமைச்சர்கள் மலிந்த அதிகாரக் கூட்டம்! நமைச்சல் எடுத்த கையூட்டு நாற்றம்!

பள்ளிகள் எனப்படும் பகற்கொள்ளைக் - கூடங்கள்: பள்ளிப் பிள்ளைகள் பாடவும் ஆடவும் சீருடை அணிந்து சிறப்புறத் திரண்டு ஊர்வலம் போகவும் உதவிடும் உதிரிகள்!

உடலை நெளித்தும் உறுப்புகள் குலுக்கியும் நடலைப் பெண்டிர்கள் நாணமில் ல்ாமல்,

அருவருப் பாக அரைகுறை ஆடையில்

திரைப்படம் நடிக்கும் தெருக்கூத்துக் கலைகள்!

ஐயகோ ! இத்துணை அவலத்துக் கிடையில் உய்யுமோ நாடு, இவ் வுலுத்தர் ஆட்சியிலே!

- 1994