பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

245

புழுவுற நலிந்து புன்மையற் றொழிக!

செயலலி தாவே! செயலலி தாவே! மயல்விலை மகளாய் ம.கோ. இரா.விடம் கயல்விழி கவினுடல் காட்டி, நெருங்கி வயப்பட வளைத்(து), அவர் வழிஅர சேறிய செயலலி தாவே! செயலலி தாவே!

நீயுநின் இனமும் நிலை பெறற்கு எம்மினம் ஏய கெடும்புகள் எய்தல் வேண்டுமென்று) ஆளும் வீடண அரம்ப அமைச்சரொடு நாளொரு பொய்யும் பொழுதொரு புளுகுமாய் நொந்த வறுமையில் நாளும் நொடிந்திடும் சிந்தனை யிழந்த சிற்றுார் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஏமாற்று நடிகையே! காய்த்துப் பழுத்த கன்னி அழுகலே!

தமிழொடு தமிழினம் தமிழ்நாடு தழைத்திட அமிழ்க நின் னாட்சி! அறக்கொடி யாள்நின். கொழுவுடல் உருகிக் கொடுநோய் எய்திப் புழுவுற நலிந்து புன்மையுற் றொழிக! பொய்யா நாவிற் புலமையை எய்யாக் கொடுஞ்சிறை இட்ட நீ; விரைந்தே:

- #995