பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O

கதைக்கின்றோம் - நலம் சிதைக்கின்றோம்!

ஆளுக்கொரு வண்ணக் கொடி! நாளுக்கொரு புத்தியக்கம்! தோளுக்கொரு நீளத்துண்டு - எனத் தேளுக்கதி காரம் பெற

- அலைகின்றோம் - சீர்

குலைகின்றோம்!

கூட்டத்திற்கோர் மேடை கட்டி ஈட்டத்திற்கோர் உண்டில் ஏந்தி ஆட்டத்திற்கோர் நடிகை காட்டி - மன நாட்டமெல்லாம் பொருள்மேல் வைத்துப்

பொய்க்கின்றோம் - கரவு, வைக்கின்றோம். -

எதுகைமோனை அடுக்குச் சொற்கள்

முதுமைத் தமிழில் பேசக் கற்று - - - -

மதுவை ஊனைக் கிறக்க உண்டு - பெரும்

புதுமை நலன்கள் வளங்கட் காக -

நடிக்கின்றோம் - காசு அடிக்கின்றோம்!

மடமைச் சாதி மதத்தில் வீழ்ந்து

வடவர் பார்ப்பார் வஞ்சம் ஆழ்ந்து

உடைமை பெருக்க உண்மை தவிர்த்து - இனக்

கடமை உணராக் கழுதைகளாகிக் கதைக்கின்றோம் - நலம் சிதைக்கின்றோம்!

- 1995