பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் தொகுதி)

2. ள்ளே, 綴鑒

எந்தக் கட்சியில் நீ இருந்தாலும் இனத்தை மறந்திடாதே! தமிழா! இனத்தை மறந்திடாதே உன் சொந்தக் குடும்பம் தனைப்பல கருத்தால் கட்டுப் பொசுக்கி டாதே! . தமிழா, சுட்டுப் பொசுக்கி டாதே!

மொழி, இனம், நாடு உயர் முன்னேற்றம் தேடு பெரும் பழியறியாத் தமிழர் புகழ் பண்ணமைத்துப் பாடு!

செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் இந்தியெனும் செந்தியை மூட்டி விட்டே, அழிக்கின்றார் தமிழினத்தை ஆரென்று கேட்பதற்கோ ராளிங் கில்லை! மொழிக்கின்று வந்ததிலை தவிர்க்கிலமேல் தமிழ்நாட்டை அடிமை சூழும்! ஒழிக்கின்ற துளுடனே கொல்களிறு போல் எழுந்து முனைவீர் இன்றே!

தமிழ் உருவில் தமிழ்ப் பகைவர் இருக்கின்றார் . அவர் தமிழர்களின் தாலிகளை அறுக்கின்றார்: உமிழ்ந்ததெல்லாம் நக்கித்தின்னும் நாய்கள் . மேல் உள்ளவர்க்குக் காட்டிக்கொடுக்கும் பேய்கள்! .

ஆடினை ஆயிரம் பாடினை ஆயிரம்! ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம் அசைத்ததா பகைவன்ர உன்றனின் வாயுரம்? தமிழா! அடதமிழா - நீ அழன்றெழு அரிமா நடையிடு வினைமுடி! அதுதான் செந்தமிழ்த் தாயுரம்! &