பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

155 8.9.1991 - அன்று சென்னையில் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தமிழின உரிமையை வலியுறுத்தியும், இராசீவ் கொலைகுறித்துத் தணுவைப் புகழ்ந்தும் பேசியதற்காகச் செயலலிதா அரசால் சிறைவைக்கப்பட்டார் நம் ஐயா அவர்கள். அப்போது அரசுக்கு அறிவுறுத்தியது இப் பாடல். 156. உழைப்பிலும் செயலிலும் தமிழினம் உய்தலே குறியென வாழ வழி கூறி,

ஊக்கம் இழக்கச் செய்தல் வேண்டாமென்று உரைக்கிறார் பாவலரேறு.

157 நாற்பதாண்டுகளாய் நோற்பர் போல் நொடிப்பொழுதும் தளர்வின்றி உழைத்துக் கொண்டிருந்தும், நுடங்கிப் போகும் முடனாய் இருக்கும் தமிழனையே அடிமை மீட்குவோம் - என்றுரைக்கிறார் பாவலரேறு. . 153 எட்டிக் கொட்டையில் இனிப்பைச் சுவைத்திடும் தமிழின நிலை விளக்கம். 91-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் செயலலிதா தமிழக ஆட்சியைப் பிடித்ததைக் குறிப்பால் உணர்த்தியது. 159 செயலலிதாவின் அழிம்பு ஆட்சியில் தமிழர்படும் பேரின்னல்களைத் தாங்க இயலாமல் செயலலிதாவின் முழக்கம் நிற்கும் காலமே தமிழினம் உயிர்பிழைக்கும் காலமென்று உரைக்கின்றார் பாவலரேறு 160. செயலலிதா ஆண்ட சூழலில் தமிழ் நாட்டாட்சி இழிவற்றிருந்த நிலையை

அப்படியே காட்சியர்க்குகிறது பாடல். 161 மக்களெல்லாம் பார்ப்பனர்க்கே அடிமை எனும் பழிமை நீக்கி தமிழோடு தமிழராய் நேர்மையாய் நெறிவாழ்வீர் என்று அறிவுறுத்துகிறார் பாவலரேறு. இப்பாடல் 91 s ! ஒ! பார்ப்பனரே! - என்றே ஐயா அவ்ர்களால் தலைப்பிடப் பெற்றிருந்தது. முன்னரே இத்தொகுப்பில் 62ஆம் பாடல்) ஓ! ஒ ஓ! பார்ப்பனரே!-என வேறொரு பாடலுக்குத் தலைப்பிட்டிருப்பதால், இப்பாட்லின் தலைப்பு இன்னபடி மாற்றப் பெற்றிருக்கிறது. 162 மாபெரும் தமிழ்ப் பேரினம் அழிந்து கொண்டுள்ளதே, இளைஞர்களே இழிவாய்ப் போகாதீர், குன்று மண் ஆனதாய்க் குன்றி போதல் வேண்டாம்! கேடுகள் சாய்க்க, பைந்தமிழ் நாடு மீட்க வாருங்கள் என அழைக்கிறார்

163. தடாக் கொடுஞ்சட்டத்தின் கீழ் நம் பாவலரேறு ஐயா அவர்கள் சிறைப்

படுத்தப்பட்டபோது எழுதியது இப்பாடல். -

- தமிழினத்தின் அடிமை நிலையினை விளக்கியதோடு, தம்மின் உறுதிநிலைபோல் ஆயிரம் பேரேனும் இருப்பாராயின் தமிழினம் விழித்தெழுமே என்கிறார் பாவலரேறு. - . . - .

16:இப்பாடலும் தடாச் சட்டத்தின்கீழ்ச் சிறைப்படுத்தப்பட்டபோது எழுதப்

பெற்றதே.

-உஅ