பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்ப் பாட்டு!

முரசே முழங்குக! முரசே முழங்குக;

முரசே முழங்குக, நீ! அரசே செந்தமிழ் அரசே வாழ்கென, முரசே முழங்குக, நீ! 1

சங்கே ஊதுக! சங்கே ஊதுக!

சங்கே ஊதுக, நீ!

எங்கோ மூவர் ஏற்றிய தமிழெனச்

சங்கே ஊதுக, நீ! 2

பம்பை பம்புக! பம்பை பம்புக!

பம்பை பம்புக, நீ!

எம்பைந் தமிழர சோச்சுக என்றே

பம்பை பம்புக, நீ! 3

கொம்பே அலறுக! கொம்பே அலறுக! கொம்பே அலறுக, நீ! எம்பே ரிசைத் தமிழ் எங்கணும் முழங்கிடக் - கொம்பே அலறுக, நீ! 4

கரடிகை உறுமுக! கரடிகை உறுமுக ! கரடிகை உறுமுக, நீ! நெருடர் நுழைக்கும் வடமொழி விரட்டிடக் - கரடிகை உறுமுக, நீ! 5

முழவே முரலுக முழவே முரலுக முழவே முரலுக, நீ! கழலணி மறவர்கள் விறல்பெற நடந்திட முழவே முரலுக, நீ!

பறையே பிறங்குக! பறையே பிறங்குக! பறையே பிறங்குக, நீ! பொறையே கொண்டவர் பொங்கிடில் தீதெனப்

பறையே பிறங்குக, நீ! 7