பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

19

அயில்வாய் மதிலும், பெருங்கோயில் அளையும், வாழுங் கலைமுற்றும் அயலார் கண்டே வியப்பெய்த அமைத்தாய் உன்றன் திறமெங்கே? வெயிலும் மழையும் பாராமல் வெற்பும் கடலும் பலகடந்து வெளியார் விரும்பும் வாணிகமும் விளைத்தாய் உன்றன் விறலெங்கே? பயிலுங் கல்விப் பயன்முற்றும் - பண்பா டெல்லாந் துறந்தாய்நீ! பழகுந் தமிழும் மறந்தயலார் பழிசேர் மொழிக்குந் துணைநின்றாய்! துயிலும் வருமோ? இளந் தோன்றால்: துள்ளி எழுக எழுகவே! துலங்கும் உன்றன் பழஞ்சீர்மை தோன்ற எழுக, எழுகவே! -5

பூக்கும் வளங்கள் முறுவலிக்கும், புனல்பாய் நாடு நின்னாடு! பொழிலுங் காவுந் தடவயல்கள் பொதியும் பயனும் நின்செல்வம் தேக்கும் வெதிரும் வான் கமுகும் தேய்வை, மகிழும், குலைவாழைத், தெங்கும், பனையும், அடர்ந்திருக்கும் திசைதோய் மலைகள் நின்மலைகள்! து.ாக்கும் அலைக்கும் போராடித் துளைக்கும் நீர்க்குள் புகவாங்கே துதையும் குவைசேர் சிப்பிக்குள் துரங்கும் முத்தம் நின்முத்தம்! காக்குந் திறமும் குன்றியிரு கண்ணுந் திறவாய் எழுகவே! கரியும் புலியும் நிகர்க்கின்ற காளை எழுக, எழுகவே! -6