பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 20

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

எத்திப் பறிக்கும் பெருங்கூட்டம் எதிரில் இமையா விழித்திருக்கும்! இமயப் பொருப்பில் கொடிநாட்டி இருந்தாய் இன்னுந் துயில்கின்றாய்! குத்திக் கிழிப்பார் நினதுதிறம்! கூறாய்ப் பிரிப்பார் உன்னினத்தை! கூரை பிரித்தே உள்ளிறங்கிக் கொள்ளை யிடுவார் ஒருபுறத்தே ! கத்திக் களைப்போன் என்குரலுன் காதுப் பறையைக் கிழிக்கிலையோ? கள்ளுண் பித்தன் எனவாகிக் கடுமைத் துயிலுங் கொண்டாய்நீ! தித்திப் பதுவோ, வல்லடிமை? தென்னா! எழுக எழுகவே! தேடாப் பூட்கை மிகக்கொண்ட திறலாய் எழுக, எழுகவே! . . . . -7

பேச்சுந் தடுத்தார்! நீமணந்த பிறங்கும் புகழைப் பொய்யென்றார்! பிழையா அரசில் நீவாழ்ந்த - பெருவர லாற்றைக் கதையென்றார்! மூச்சுந் தடுப்பார்! உன்னினத்தை முழுதும் அழிப்பார்! தமிழா,வென் முழக்கம் நின்றன் முழுச்செவிட்டு மூளிச் செவியுட் புகவிலையோ? ஒச்சுங் கைவாள் உடனெடுப்பாய்! உறைந்த குருதிக்(கு) அனல்காய்வாய்! உண்டால் உரிமை! அதுவல்லால் உலையாச் சாவை உடனழைப்பாய்! ஏச்சுங் கேட்டே உறங்குதியே!

இளமைத் தமிழா எழுகவே!

இறவாப் புகழுக் கிலக்கான ஏறே! எழுக, எழுகவே! - -8